நாடாக இருந்தாலும் சரி , தனிமனிதனாக இருந்தாலும் சரி , சமுதாயமாக இருந்தாலும் சரி தடையில்லாத முன்னேற்றத்திற்கு மனித உழைப்பு வேண்டும் . இந்த உழைப்பை த் தரக்கூடிய மனிதர்கள் மிகுதியாக இருக்கும் நம் நாட்டில் முன்னேற்றம் என்பது அரசியல்வாதிகளின் வாய்ப் பேச்சில் மட்டுமேயுள்ளது . ஒரு பக்கம் இந்தியாவில் உழைக்காமலேயே பெரும் செல்வம் சேர்க்கும் ஒரு கூட்டம் உள்ளது . இவர்கள் அரசியலை ஒரு பாதுகாப்புக் கவசமாகக் கொண்டுள்ளார்கள் . இவர்களே அதிகாரமிக்கவர்களாக இருப்பதால் இவர்களை கா வர்களாலோ , நீதிபதிகளினாலோ கட்டுப்படுத்த முடியவில்லை . மற்றொரு பக்கம் எங்கு நோக்கினும் பிச்சைக்காரர்கள் . கோயில் வாசலில் ஒரு கூட்டம் ஐந்துக்கும் பத்துக்கும் அலைமோதுது . கோயில் உட்புறம் ஒரு கூட்டம் நூறுக்கும் இருநூறுக்கும் இறைப்பணி யாற்றுகின்றது. கோயிலுக்கே வராமல் ஒரு கூட்டம் லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கின்றது. தெருக்களில் , ஹோட்டல் வாசலில் , சிக்னல் நிறுத்தங்களில் , வர்த்தக மையங்களில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உழைக்கும் தகுதியானவர்களை பயன் படுத்திக்கொள்ளாமல் , உழைப்பை ப் புறக்கணிப்பதால் நாம் நம்முடைய முன்னேற்றத்தை பெரிதும் இழந்து வருகின்றோம். நாட்டிலுள்ள அரசியவாதிகள் மட்டுமே செல்வந்தர்களாக இருப்பது நாட்டின் முன்னேற்றத்தைக் குறிப்பதில்லை . அது நாட்டின் அவலம் என்றுதான் நான் கூறுவேன்
No comments:
Post a Comment