Sunday, July 20, 2014

Eluthatha kaditham



எழுதாத கடிதம்
ஆசியவில் சிறந்த பல்கலைக் கழகங்களில் இந்தியா இப்போது 200 வது இடத்தை எட்டிப் பிடித்திருப்பது சிலருக்கு  கொஞ்சம் மகிழ்ச்சியளிக்கின்றது. மகிழ்ச்சியளிக்கின்றதா! பல்கலைக் கழகங்கள் புற்றீசல் போலப் பெருகி வரும் கால கட்டத்தில் 200 வது இடத்தை எட்டிப் பிடித்தது உண்மையான முன்னேற்றமாகி விடாது .100 பேரில் 99 வது இடத்தைப் பெறுவதும் 200 பேரில் 199 வது இடத்தைப் பெறுவதும் ஒன்றாகிவிடாது.
இந்தியா பலவற்றில் முதல் இடங்களில் இருப்பதையும் நினைத்துப் பார்த்து மகிழுங்கள். ழல் புரிவதில் முதல் 5 இடங்களில் பொது இடங்களில்  பெண்களுக்குப் பாதுகாப்பின்மை தருவதில் இந்தியா முதல் பத்து இடங்களில் ,போலிப் பொருட்கள் உற்பத்தியில் முதல் 12 இடங்களில், மோசமான சாலை வசதியில்  முதல் 15 இடங்களில், மோசமான ரயில் போக்குவரத்து வசதியில் முதல் 16 இடங்களில்,நேர்மைத்தன்மையின்மையில் முதல் 20 இடங்களில்


கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் செலவிடப்படும் தொகை அரசியல்வாதிகளின் போக்குவரத்திற் காகச் செலவிடப்படும் தொகைகளைவிட மிகக் குறைவு .செலவிடப்படும் தொகையும் முறையாகச் செலவழிக்கப்படாததால் பயன்பாடு மக்களைச் சென்றடைவதில்லை.
.

No comments:

Post a Comment