“10000 குத்துக்களை ஒரு முறை பழகியவனைக் கண்டு நான் அதிகம் பயப்படுவதில்லை. ஆனால் ஒரு குத்தை 10000 முறை பழகியவனைக் கண்டு நான் அதிகம்  பயப்படுகின்றேன்” - - (Bruce Lee)
பல விஷயங்களைப் பற்றித் தெரிந்திருப்பவனை விட ஒரு விஷயத்தை  அதிகம் தெரிந்திருப்பவன்  அதில் உண்மையிலேயே செயல்திறன் மிக்கவனாக இருப்பான். பிறரை எடைபோடுவதைப் போல அவனையும் எடைபோட்டுவிட முடியாது.
பலவற்றைத் தெரிந்திருந்தால்
தான் அறிஞன் என்று பலர் நினைக்கின்றார்கள். ஆனால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியனவற்றைத்
தெரிந்திருப்பதை விட, அறிந்திருப்பதை விட புரிந்து வைத்திருப்பது முக்கியம். அப்போதுதான்
அது நெருக்கடியான நேரத்திலும் ஒரு உரிமைப்பொருளாய் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்
. 10000 குத்துக்களைப் பற்றி தெரிதிருப்பவனுக்கு போதிய பயிற்சி இல்லாததால் ஒரு குத்துக்கூட
நெருக்கடியான நேரத்தில் பயன் தருவதில்லை ..ஏனெனில் அவனுடைய முயற்சி அதிகம் தெரிந்து
கொள்வதுதான். ஆனால் ஒரே குத்தை 10000 முறை பயிற்சி எடுத்துக் கொண்டவனுக்கு அது அத்துப்படி
.எந்தச் சூழ்நிலையில் அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தனிச்சைச் செயலை
அவன் மட்டுமே அறிவான் .அவனை வெற்றிபெறுவது கடினம் என்று தற்காப்புக் கலையையே  தன் வாழ்வாதாரமாகக் கொண்ட  புரூஸ் லீ தன் அனுபவத்தை எடுத்துச் சொல்லுவது வழக்கம்.  
No comments:
Post a Comment