Monday, October 14, 2019

political thoughts


துயரம் கொள்ளாதே மனமே .

சான்றிதழ் வாங்கக் காசு,சாமி கும்பிடக் காசு  அனுமதி பெறக் காசு , கோப்பை நகர்த்த காசு ,பட்டா தர காசு,கடன் பெறக்  காசு ,மின்னிணைப்புப் க்கு காசு, குடிநீர் வழங்கக் காசு ,வண்டி பதிய காசு , நெடுஞசாலையின் போகarasuக் காசு , பணி நியமனத்துக்கு காசு, பணி ஒப்பந்தத்திற்கு காசு, முழுசா சம்பளம் தர காசு ,  அரசு செய்யவேண்டிய கடமைகளுக்கே காசை தினம் தினம் அள்ளிக் கொடுக்க சம்பாதிக்க வேண்டியிருக்கு. லஞ்சமாக க் காசைக் கொடுக்காமல் இந்த நாட்டிலே எதுவும் நடக்காது என்ற நிலையால் அனைத்துத் தரப்பினரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். லஞ்சமாகப் பணம் கொடுத்துக் கெடுத்து இனிமேல்  அப்படி  லஞ்சம்  கொடுப்பதற்காகவே நேர்மையாக வாழ்பவர்களும் லஞ்சம் வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவருவது கவலைக்குரியது

இந்திய அரசியல்வாதிகளுக்கு அரசியல்  அறிவு கம்மி, அதனால செயல்  திறன்  மிக  மிகக்  குறைவு ஆசை அதிகம் அதனால  கை சுத்தமில்லை , கட்சியில் ஒரு  சிலருக்கு  பேச்சுத்  திறமை  மட்டும்  இருக்கும்  அதனால மற்றவர்களுக்கு    காதுவரை  நீண்ட   வாய். மக்கள் தங்களை நினைக்கவேண்டும் என்பதற்காக விளம்பரம் தேடுவார்கள் ,அரசாங்க செலவில் அனைத்தையும் அனுபவிக்க விரும்புவார்கள் . கொள்கை கொள்கை  என்பார்கள் ஆனால்   கொள்கை என்னவென்று தெரியாது. மக்களோடு கலந்து அவர்கள் குறைகளைக் கேட்டறியமாட்டார்கள் . மக்களைப் பாரத்தால் எதோ நேரமே இல்லாமல் வேலை செய்வதுபோல அங்குமிங்கும் நடப்பார்கள். தங்கள் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்திற்காகவும் . பொழுது போக்கிற்காகவும், குடும்ப நலனுக்காகவும் அரசின் வருவாயை வரம்பின்றிச் செலவழிப்பார்கள் . இது உண்மையில் மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு ஒப்பான செயலாகும் .

மயக்கும் மொழிகளால் அதைச் செய்தோம் ,இதைச் சாதித்தோம் ,என்றும் (நிறைவுற்று முழுமையாகப் பலன்தராத) ஐந்தாண்டுத் திட்டங்கள், தன்னிறைவு , 2020  ல் வல்லரசு .என்றும் அவர்கள் பேசும் பேச்சுக்கள் எல்லாம் காலங்கடந்து பொய்த்துப்போயின ..அதற்கும் மக்களையே குறை கூறுவார்கள் .. உண்மையில் இயற்கையாக என்ன முன்னேற்றம்  நிகழுமோ அவைதான் இவர்களுடைய கேடுகளையும் கடந்து  இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றது .பெரும்பாண்மையான மக்களின் நலனுக்கு உகந்த சாதனையான முன்னேற்றம் என்று பெரிதாக ஏதுமில்லை . இந்த மனநிலையோடு இந்திய அரசியல்வாதிகள் தொடர்ந்து செயல்பாடுவார்களே ஆனால் நாட்டின் முன்னேற்றம் என்பது வெறும் கானல் நீர்தான்     


No comments:

Post a Comment