Saturday, May 7, 2022

Circular wave train- I

 A revolutionary thought in the fundamental physics which links both micro and macro world.

வட்ட அலை-I       

      ஒளி அலை ஊடகத்தில் ஊடுருவிச் செல்லும் போது அது ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளியின்றி ஒரு சங்கிலித் தொடர் போலப்  பரவிச் செல்கின்றன அப்படிப் பரவிச் செல்லும் போது ஒவ்வொரு அலைக்கும்  முந்திய அலை வழிகாட்ட பிந்தைய அலை ஒரு உந்துதலைத் தருகின்றது ஒளிஅலைகள்  மின்காந்த அலைகளாகும் என்று மாக்ஸ்வெல்  நிறுவினார் அதில் மின்புல அலைகளும் காந்தப்புல அலைகளும் பரவிச் செல்லும் திசைக்குச்  செங்குத்தாகவும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகவும் இருப்பதாகக் கண்டறிந் துள்ளார் . ஒளியை விட வேகமாகச் செல்லக்கூடிய பொருள் இம்பிரபஞ்சத்தில் எதுவுமில்லை என்று இன்றுவரை நம்பப்படுகின்றது. ஒளியின் திசை வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிமீ. 

      ஒளி அலைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை ஒளிமூலத்துடன் மட்டும் தொடர்புகொண்டவை , ஒளி வாங்கியுடன் மட்டும் தொடர்புகொண்டவை , மற்றும் இவற்றோடு தொடர்பின்றி தனித்து விடப்பட்ட ஒளிக்கற்றை  ஆகும்.. பொதுவாக ஒளிஅலைகள் நீண்ட தொலைவு கடந்து செல்லும் போது தன் ஆற்றலை இயக்கத்தின் காரணமாக இழக்கின்றது . அதனால் அவை பெருந்தொலைவு கடந்தபின்பு மெலிந்து காணாமற் போய்விடுகின்றது . ஒளிமூலத்துடன் தொடர்புடைய ஒளி அலைகள் பரவலின் காரணமாக இழக்கும் ஆற்றலை ஓரளவு புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றது. அதனால் அவை கூடுதல் தொலைவு கடந்து செல்கின்றன இலக்கு நோக்கிய பயணத்தில் புலக்குறுக்கீடு இல்லாதவரை அவை நேரலைகளாகவே பயணிக்கின்றன. ஆனால் துண்டிக்கப்பட்டு தனித்து விடப்பட்ட ஒளி அலைக்கு இந்த வாய்ப்பு இல்லை. இந்த அலைக்கற்றை அலை மூலத்துடன் தொடர்பில்லாமலும் ,சென்றடையும் இலக்குடன்  தொடர்பில்லாமலும்  ரயில் வண்டித் தொடர்போல ஊடகத்தில் ஒரு நேர்கோட்டுப் பாதையில் ஊடுருவிச் செல்ல முடியும்.  ஆனால் அலைகள் போல ஒரு தனித்த அலை இயக்கிச் செல்ல பிற அலைகளின் உந்துதல் இல்லை .அதனால் அது  நிலைப்புத் தன்மையை தனக்குத் தானே தேடிக்கொள்கின்றது. தன்னைத் தானே தொடரும் ஒரு அலையாக ஒரு குறுகிய வட்ட அலையாக நிலைமாற்றிக்கொள்கின்றது.. அதனால் அது ஒரு நேரலை போல ஆற்றல் இழப்பின்றித் தொடர்ந்து  இயக்கத்தில் ஈடுபடுகின்றது இந்த நிலைமாற்றம் ஒரு தனி அலைக்கு நீண்ட கால நிலைப்புத்தன்மையைத் தருகின்றது

 

                                                                              நேரலையும் வட்டலையும்


  


                                

No comments:

Post a Comment