Sunday, May 8, 2022

 

 வான வெடி அண்டம் Fireworks galaxy) 

             ஏறக்குறைய 22 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலுள்ள NGC  6946 என்று குறிப்பிடும் இந்த அண்டம் நடுத்தரமான சுருள்புயத்துடனும்  குறுக்குவெட்டுத் தோற்றத்துடனும் தோற்றமளிக்கும் ஒரு அண்டமாகும். இதன் சுருள்புயத்தில் வெடித்துச் சிதறும் குறைந்தது 10- சூப்பர்நோவா விண்மீன்களைக் கண்டறிந்துள்ளனர் இதில் உள்ள ஒரு சில வயதான சூப்பர்நோவாக்கள் இந்த அண்டத்தின் வான வெடித் தோற்றத்திற்குக் காரணமாக இருப்பதாகக் கூறுகின்றார்கள். நம்முடைய அண்டத்தோடு ஒப்பிட நமது அண்டத்தில் ஒரு சில நூறாண்டுகளுக்கு ஒரு சூப்பர்நோவா தோன்றுவதாகக் கூறுகின்றார்கள். இதன் இடைநிலைச் சுருள்புயம் ,சுருள்புய அண்டம் Sb வகையிலிருந்து Sc  வகைக்கு நிலைமாற்றம் பெறுவதையும் அதில் காணப்படும் திடீர் மாற்றங்கள் மிக அதிக அளவில் விண்மீன்கள் உருவாவதையும் சுட்டுகின்றன


   1798  ம் ஆண்டில் வில்லியம் ஹெர்சல் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்ட இது 25.2 மில்லியன் (7.72 Mpc)  ஒளியாண்டுகளுக்கு அப்பால் அன்ன வடிவ (Swan)  அண்டமான து நிறை மிக்க விண்மீன்களைக் ல்.ளம் விண்மீன்கள் நிறைந்த ஒரு பெரிய கொத்துக் கூட்டம் என்று நம்பப் பட்டது .2017 வாக்கில் NGC 6946 அண்டமும் ஒரு குறு அண்டமும் மேற்கொள்ளும்    குறுக்கீட்டு வினைகளால் ஏற்படுகின்றது என்பதை அனுமானித்துள்ளனர் . கடந்த நூறாண்டு காலத்தில் இந்த அண்டத்தில் மட்டும் 10 குபேர நோவாக்களைக் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாகவே இது வான வெடி அண்டம் என்று விண்வெளி ஆராச்சியாளர்களால் குறிப்பிடப்படுகின்றது 

           2004 ம் ஆண்டில் இவ்வண்டத்தில் 15.2 ஒளிபொலிவெண்ணுடன் கூடிய  ஒரு சூப்பர்நோவா கட்புலனுணர் ஒளியின் நெடுக்கையில் 12.7 ஒளிபொலிவெண்ணைக் கொண்டிருப்பதைக் கண்டனர் . இந்த அண்டத்தை ஒரு சில நாட்களுக்கு முன்னர்  எடுத்த பதிவுகள் அவ்விடத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்துச் சிதறியிருப்பத்தைச் சுட்டிக்காட்டியது. இது சூப்பர்நோவாவிற்கு முன்னோடியாக இருந்த விண்ணுறுப்பை இனங்காட்டியுள்ளது. வெடிப்புக்கு முன்னும் பின்னும் உள்ள விண்ணுறுப்புகளை இதுவரை 7 முறை மட்டுமே பதிவுசெய்திருக்கிறார்கள். இங்கு சூப்பர்நோவாவின் முன்னோடி 15 சூரிய நிறை கொண்ட ஒரு பெரிய செம்மீனும்  நீல நிறம் கொண்ட ஒரு பெரிய விண்மீனும் இரட்டை இணை விண்மீன்களாக இடையீட்டுச் செயல் புரியும் ஒரு அமைப்பாகும்

 

          2009  ம் ஆண்டில் இந்த அண்டத்திலுள்ள ஒரு பிரகாசமான விண்மீன் திடீரென்று பிரகாசமாக ஒளிரத்  தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ந்தது அப்போது அதன் பிரகாசம் சூரியனைவிடஒரு மில்லியன் மடங்கு அதிகமாக இருந்தது  . அதன் பிறகு அதன் பிரகாசம் விரைந்து மங்கத் தொடங்கியது. 2017 ல்  ஹபள் தொலைநோக்கி முலம் ஆராய்ந்த போது அந்த சூப்பர்நோவா அவ்விடத்தில் தற்பொழுது அங்கில்லாததை அறிந்துகொண்டனர் அங்குள்ள எச்சம் அகச்சிவப்புக் கதிர்களை உமிழ்ந்துகொண்டிருக்கின்றன . விண்மீன் அழிவுற்றபோது உருவான கருந்துளை விண்மீன் அருகாமையிலுள்ள பொருளை உட்கவருவதால் இந்த கதிர்வீச்சு ஏற்படுகின்றது என்று கருதுகின்றார்கள்




No comments:

Post a Comment