Saturday, August 26, 2023

Life without death ?

Life without death ?

        Everyone born in the world is destined to die one day. However one can increase his life span. Death is caused by the failure to repair the failure of the main organs that are responsible for the protection of the coordinated body organs. The movement of the body organs is based on the functions of the biological molecules contained in them. When all biological molecules are chemical molecules, they are formed by the atoms that are the basis of biological molecules. Due to bad eating habits, drug addiction, etc., the biological molecules are continuously consumed, their efficiency is reduced and the life is affected by the distorted and altered functions. We can realize this by the excited and ionized states of an anu. When an atom is energized, an electron jumps from the inner orbital to one of the outer orbitals. But it emits this excitation energy as light and regains its normal state by itself. When the electron is energized, it can move away from the atom it is attached to. Ions are more energetic than atoms and seek an opposite charge from outer space to become electrically neutral. It returns to its normal state when it gains a lone electron. When a lone electron is not available, the oppositely charged part of the molecule combines with one another. This addition greatly limits the molecule's ability to function normally. Organs do not get damaged if the biological molecule keeps on renewing itself. High energy light is not useful for this. Sensory light does not penetrate the body and reach biological molecules. A moderate hot bath is more useful for this.. Music with a thrilling sound for the body and arousal are also useful for this. A great way to increase longevity is to take a hot tub every day. Sunbathing in the young sun is beneficial for this 

மரணமில்லாப் பெரு வாழ்வு

 

மரணமில்லாப் பெரு வாழ்வு 

       உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் இறந்துபோகவேண்டும் என்பது விதி. என்றாலும் ஒருவர் அவருடைய  வாழ்நாளை அதிகரித்துக் கொள்ள முடியும். மரணம் என்பது ஒருங்கிணைந்து செயல்படும் உடல் உறுப்புக்களின் பாதுகாப்பிற்குக் காரணமாகும் தலைமை உறுப்புக்களில் ஏற்படும் பழுதைச் சரி செய்ய முடியாமல் போவதால்  ஏற்படுவதாகும் உடல் உறுப்புக்களின் இயக்கம் என்பது அவற்றுள் அடங்கியுள்ள உயிரியல் மூலக்கூறுகளின் செயல்பாடுகளாகும் அடிப்படையில் உயிரியல் மூலக்கூறுகள் எல்லாம் வேதியியல் மூலக்கூறுகளே உயிரியல்  மூலக்கூறு அடிப்படையான அணுக் களால் உருவாக்கப் படும்போது  தவறான  அணு அல்லது பகுதி மூலக்கூறு இணை யுமாறு வாய்ப்பை  ஏற்படுத்துவதால் ஏற்படுகின்றது. தவறான உணவுப் பழக்கம் ,போதைப்பழக்கம் ,போன்றவற்றால் உயிரியல்  மூலக்கூறுகளைத் தொடர்ந்து இம்சிப்பதால் அவற்றின் செயல் திறன் குன்றிப்போவதுடன் திரிவுற்று மாற்றுச் செயபாடுகளினால் உயிருக்கு ஊறு விவளைவிக்கின்றன. இதை நாம் ஓர்  அனுவின் கிளர்ச்சி  மற்றும் அயனித்த நிலைகளினால் உணர்ந்து கொள்ள முடியும் .  அணுவிற்கு ஆற்றலூட்டும் போது அதிலுள்ள எலெக்ட்ரான் உட்சுற்றுப் பாதையிலிருந்து வெளிச்சுற்றுப்பாதைகளில் ஒன்றுக் குத் தாவுகிறது. ஆனால் இந்த கிளர்ச்சியாற்றலை  ஒளியாக  உமிழ்ந்து மீண்டும் தன் இயல்பு நிலையைத் தானாவே மீட்டுப்  பெறுகின்றது  கூடுதல் ஆற்றலூட்டும் போது எலெக்ட்ரான் தான் இணைந்துள்ள அணுவைவிட்டு விலகிச் சென்றுவிடலாம். அயனிக்கள் அணுக்களை விட வீரியமாகச் செயல்பட்டு  மின் நடுநிலை பெறவேண்டி புறவெளியிலிருந்து ஒரு எதிர் மின்னூட்டத்தைத் தேடுகின்றது. தனித்த எலெக்ட்ரான் கிடைத்தால் அது தன் இயல்பு நிலையைத் திரும்ப அடைகின்றது. தனித்த எலெக்ட்ரான் கிடைக்காமல் போகும்போது எதிர் மின்னூட்டம் கொண்ட  பகுதி மூலக்கூறு ஒன்றுடன் இணைந்துவிடுகின்றது. இச்சேர்க்கை அந்த மூலக்கூற்றின் இயல்பான செயல் திறனை பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. உயிரியல் மூலக்கூறு திரிவுறாமல் தன்னைத் தானே புதிப்பித்துக்கொள்ளுமானால் உடலுறுப்புக்கள் பழுதடைவதில்லை .இதற்கு ஆற்றல் செறிவு மிக்க ஒளி பயன்தருவதில்லை. கட்புலனுணர் ஒளி உடலை ஊடுருவுச் சென்று உயிரியல் மூலக்கூறுகளை அடைவதில்லை. இதற்கு மிதமான வெப்பக் குளியலே அதிகமாகப் பயன்தரத்தக்கதாக இருக்கின்றது..உடலுக்குச் சிலிர்ப்பூட்டும்  ஒலி வடிவிலான இசையும், எழுச்சியுரையும் கூட இதற்கு பயன் தருகின்றன . வாழ்நாளை அதிகரித்துக்கொள்ள ஒரு சிறந்த வழி ஒவ்வொரு நாளும்  வெப்பக்குளியல்  எடுத்துக்கொள்வதாகும். இதற்கு இளம் வெயிலில் சூரியக் குளியல் நற்பயன் அளிக்கின்றது

Phenomenological study of Nature-1

 

Phenomenological study of Nature-1

       The nature is capable of executing any physical phenomena by itself both in the microscopic and the macroscopic world, like a skilled scientist with deep   knowledge in all subjects. It is precisely one or more specific  characteristics of different atoms and the elementary particles that determine the specific function of each atom and elementary particle.Atoms and molecules have a kind of perception - sense of feeling the close environment With a kind of intrinsic discipline among them, they involve only in allowed mutual interaction as if they are informed what should and should not be done. The chain of such interactions performs almost all kind of work in building up the structure of the whole universe. Not only the reproduction and growth of every living being but also birth and death of stars substantiate this cosmic law – a set of unique rules followed in nature everywhere.

         As long as the nature is undisturbed externally it will never give up its assigned work by engaging in other activities. Disturbances in nature alter its natural behavior. Hence It is not possible to understand the real picture of nature by allowing continuous disturbances in its natural functions. That is why the physics of invisible elementary particles in the micro-world, and the physics of the metabolites of celestial organs scattered everywhere but invisible to naked eye in the macro-world continue to be incomprehensible. It becomes inevitable to make corrections in science every time new events are recorded. Our science always  remain as an approximation to nature.

      Is the universe bound or infinite? Are there any specific characteristics and physical properties associated with time and space ? what is electrical charge  and how it is acquired by a particle ? what are the intermediate stages in energy-matter conversion ? The source of everything that happens in the universe is the energy and matter contained in it. But no one knows anything about their source and origin , though it is said that the source of energy is matter and  the source of matter is energy .The conceptual difficulty is simply solved by assuming that  both the energy and matter required by the universe were provided initially, like born with silver spoon.

    Energy condenses into elementary particles, particles         construct atoms, atoms synthesize molecules and molecules form macromolecules and celestial organs.  The eternal universe is physically possible only when its total energy content remains same or it should be regenerated every time when it is lost by doing work or transferred from one form to another. The conservation of energy requires the universe to be an isolated system.

       However it is not strong enough to deny the existence of multiverse. Multiverse theory suggests that our universe may not be the only one. Instead, there may be an entirely different universe, distantly separated from ours — and another, and another. Indeed, there may be an infinity of universes, The pair production may be considered as one of the evidences of parallel universe. In pair production energy is always converted into a particle and its antiparticle. In close proximity they get annihilated but in the process of production the fly apart to conserve momentum. Since the physics of fundamental particles and atoms is same for antiparticles and anti atoms , the probability of formation of universe with all particles is same for universe with all antiparticles. The perfect discipline in nature can make the multiverse to be true.  

Thursday, August 24, 2023

இயற்கை அறிவியல்-1

 

இயற்கை அறிவியல்-1

இயற்கையின் அறிவியல் இற்கையானது .நுண்பொருள் உலகமாகட்டும் அல்லது பேரியல் பொருள் உலகமாகட்டும்  எந்த நிகழ்வுகளையும்  திறமையான விஞ்ஞானி போல வெகு நுட்பமாகச் செயல்படுத்தும் ஆற்றல்மிக்கது. ஒவ்வொரு அணுவும், அடிப்படைத்துகளும் எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற நோக்கத்தோடு, வரையறுக்கப்பட்ட  கட்டுப்பாடோடு  செயல்பட அவற்ரின் சில தனித்த  பண்புகளே தீர்மானிக்கின்றன .ஒவ்வொரு உயிரின் இனப்பெருக்கமும் ,வளர்ச்சியும் இந்த பிரபஞ்சவிதியைத் தெரிவிக்கின்றன. புற வெளியிலிருந்து இடையூறுகள் இல்லாதவரை அவை ஒருபோதும தனக்குரிய செயல்பாடுகளை விட்டுவிட்டு பிற செயல்களில் ஈடுபடு வதில்லை. இடைஊறு ஏற்படுத்திவிட்டு இயற்கையை ஆராய் வதின் அதன் இயல்தன்மைகளை  அறிந்துகொள்ள முடிவதில்லை. நுண்பொருள் உலகில் கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத்துகள்களின் இயற்பியலையும் , எல்லையற்ற விண்வெளியில் எட்டாத தொலைவு களில் எங்கும் சிதறிக்கிடக்கும் விண்ணுறுப்புக்களின் வளர்சிதை மாற்றங்களின் இயற்பியலையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையே தொடர்கின்றது. புதியபுதிய நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும்  அறிவியலில் திருத்தங்கள் செய்வது தவிர்க்கயியலாததாக இருக்கின்றது

    பிரபஞ்சவெளி ஒரு வரம்பிற்கு உட்பட்டதா இல்லை எல்லையற்றதா? தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திற்கும் வெளிக்கும் உள்ளார்ந்த இயற்பியல் பண்புகள் ஏதேனும் இருக்கின்றதா ?  பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்திற்கும்  மூலம் அதில் அடங்கி யிருக்கும் ஆற்றலும் பொருளும் தான். ஆற்றலுக்குப் பொருளும் ,பொருளுக்கு ஆற்றலும் மூலம் என்றாலும் அவற்றின் மூலம்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை .பிரபஞ்சம் தோன்றும் தொடக்கநிலையிலே  அதற்குத் தேவையான ஆற்றலும் பொருளும்  படைக்கப்பட்டன என்று  சொல்கின்றார்கள் . ஆற்றல் அடிப்படைத்துகள்களையும் ,அடைப்படைத்துகள்கள் அணுக்களையும் ,அணுக்கள் மூலக்கூறுகளையும் ,மூலக்கூறுகள் பொருட்களையும் ,விண்ணுறுப்புக்களையும்  உருவாக்குகின்றன

Thursday, August 10, 2023

அனாதைக் குழந்தைகள்

 

அனாதைக் குழந்தைகள் அதிகமாகிவிட்டது என்றால் அனாதை ஆஷ்ரம் அமைத்து பாதுகாப்பீர்களா,அதற்கான செலவுகளை உங்கள் வருமானத்திற்குள் செய்வீர்களா இல்லை நன்கொடை வசூலிப்பர்களா ? இல்லை அரசாங்கம் கவனிக்குமாறு வற்புறுத்துவீர்களா ?

அனாதைகளை  பாதுகாப்பதை விட அவர்கள் உருவாக்கப்படுவதை தவிர்க்கவேண்டும் . பெரும்பாலும் தவறான உறவுகள் மூலம் உண்டாகும் குழந்தைகள் ,சாலை மற்றும் ரயில் விபத்துகள் ,இயற்கைப் பேரிடர் போன்றவற்றால் அனாதைகள் உருவாகிறார்கள் . பெரும்பாலும் அனாதை அஸ்ரமங்கள் வர்த்தக ரீதியில் நடைபெறுவதால் அனாதைகளை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கருதி அவர்களுக்களான சமுதாயப் பாதுகாப்பை அரசாங்கமே செய்யவேண்டும்...அனாதைகளுக்கு இலவச உணவு, கல்வி, உடை ,இருப்பிடம் போன்றவற்றை மக்களுக்கான மக்கள் அரசாங்கமே செய்யவேண்டும்