நாட்டில் நீதியை நிலைநாட்ட விரும்பினால் அது நீதித்துறை மற்றும் காவல் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் மட்டுமே முடியும். இவ்விரு துறைகளும் நேர்மையான அரசாங்கத்திற்கு உட்பட்டு செயல்படுவது நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லது . ஆனால் ஆட்சியாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களாக இருக்கும் போது இந்த துறைகள் நேர்மையாகச் செயல்படும் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுகின்றது .அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுகின்றார்கள் .இல்லை இடமாற்றம் , பணி உயர்வுகுத் தடை ,உயிருக்கு ஆபத்து ,போன்ற இடையூறுகள் . ஆட்சியார்களின் பிரதிநிதிகளுடன் நேர்மையான மேன்மக்களும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு இவ்விரு துறைகளையும் சேவை மனப்பான்மையுடன் நிர்வகிக்கவேண்டும் . அப்பொழுதுதான் குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகளும் அனைவருக்கும் பொது வான நீதியின் வளையத்திற்குள் வருவார்கள் . பொதுமக்கள் சமுதாயத்திற்கு வேண்டிய சட்டங்களை கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கின்றது .
No comments:
Post a Comment