சமுதாய முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சி என்ற மாயத் தோற்றத்தில் தனிமனிதர்களுடைய முன்னேற்றம் பெருமளவு தடுக்கப்படுகின்றது. தனிமனித முன்னேற்றம் மட்டுமே சமுதாய முன்னேற்றத்தை நெறிப்படுத்தி நாட்டிற்கு தன்னிகரில்லா வளர்ச்சியைத் தரமுடியும் .அது பின்னடைவின்றி நிகழ்கின்றதா என்பதைக் கவனித்து தக்கநடவடிக்கை எடுத்தால் போதும் . ஒரு அரசு ஆள்பவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று கருதினால் அந்த நாடு வரைவில் வளமிழந்து சீரழியும் .இந்தச் சீரழிவு முதலில் மக்களை மட்டுமே பெரிதும் பாதிக்கும்.அப்புறம் ஆள்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாகக் கருதி அழித்துக்கொள்வார்கள் ஆள்பவர்களின் மறவொழுக்க நடவடிக்கைகளால் நாட்டின் உண்மையான வளர்ச்சி தன் நிகழ்வாய்ப்பை இழந்து வருகின்றது . இதைப் புதிப்பிப்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்பது என்னை பெரிதும் அச்சப்படுத்துகின்றது.
No comments:
Post a Comment