Saturday, December 7, 2013

arika ariviyal

சந்திப்பது எப்போது எங்கே ?

விண்வெளிப் பயணத்தை நிஜமாக்க இன்றைக்கு பன்னாட்டினரும் விண்வெளியில் ஆய்வுக் கூடங்களை நிறுவி வருகின்றார்கள்.

விண்வெளியில் சமபக்க முக்கோண வடிவில் ஓர் ஆய்வுக் கூடம் நிறுவப்பட்டு அதன் ஊச்சிப் புள்ளிகளில் வெவ்வேறு ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆய்வு மையங்களில் மூன்று ஆராய்ச்சியாளர்கள் ணியாற்றிக் கொண்டிருந்தனர்.அவர்கள் சேகரித்த புள்ளி விவரங்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு சமயம் மூவரும் சந்திக்க வேண்டி வந்தது. மூவரு ஒரே சமயத்தில் பயணத்தைத் தொடங்கியபோது, முதல் ஆராய்ச்சியாளர் எப்போதும் இரண்டாவது ஆராய்ச்சியாளரை நோக்கியும்,இரண்டாவது ஆராய்ச்சியாளர்  மூன்றாவது ஆராய்ச்சியாளரை நோக்கியும் ,மூன்றாவது முதலாவது ஆராய்ச்சியாளரை நோக்கியும் பயணித்தினர். அவர்கள் எங்கு எவ்வளவு நேரத்தில் சந்திப்பார்கள் ?


சம பக்க முக்கோத்தின் சீர்மையினால் A,B,C என்ற ஆய்வுக் கூட ஆராய்ச்சியாளர்கள் O என்ற வடிவ  மையத்தில்ந்திப்பார்கள். வ்வொருவரும் கடந்த தொலைவு OA=OB=OC. Cos θ = AN/OA ;OA = a/√3 .ஆராய்ச்சியாளர்களின்  இயக்க வேகம்  மாறாவிட்டாலும், அதன் திசை தொடர்ந்து மாறுகின்றது. எனவே மையம் நோக்கிய அதன்  ஆக்கக் கூறு V Cos θ = V[√3/2] எனவே மூன்று ஆராய்ச்சியாளர்களும்  O  என்ற  உருவ மையத்தில் 2a/3V வினாடிக்குப் பின்  சந்திப்பார்கள் எனலாம்.

No comments:

Post a Comment