Monday, December 23, 2013

Arika ariviyal

11.ஆர்தோ,பாரா ஹைட்ரஜன்(ortho-para hydrogen) 

ஹைட்ரஜன் அணு இரண்டு வகையான ஆற்றல் நிலைகளில் இருக்க முடியும். மைய புரோட்டானும், தைச் சுற்றி வரும் எலெக்ட்ரானும் ஒன்றுக்கொன்று இணையான தற்சுழற்சியைப் பெற்று ஆர்தோ ஹைட்ரஜனாகவும், எதிரிணையான தற்சுழற்சியைப் பெற்று பாரா ஹைட்ரஜனாகவும் இருக்கும், இவ்விரு ஆற்றல் நிலைகளில்  எது தாழ்ந் ஆற்றலைக் கொண்டு கூடுதல் நிலைப்புத் தன்மையுடன் இருக்கிறது. ?

 11.. ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு புரோட்டான்கள் இருக்கின்றன.இவற்றின் தற்சுழற்சியைப் பொருத்து ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு புரோட்டான்களும் ஒரே மாதிரியாக ,ஒன்றுக்கொன்று இணையான தற்சுழற்சியைப்  பெற்றிருக்குமானால் அதை ர்த்தோ ஹைட்ரஜன் என்பார்கள் எதிரிணையான தற்சுழற்சி எனில் அதைப் பாரா ஹைட்ரஜன் என்பர். சாதாரணமாக ஹைட்ரஜன் மூலக்கூறு இவ்விரு வகைக் ஹைட்ரஜன்களாலும் ஒரு வேதிச் சம நிலையில் இருக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDvQZXBNHD4pYvMhRtUwoR6cShYdBbtadUnux4rsq15meHRwxVCnIZ6PKVgn_MDKn1DI4YBXGcwK87xXiNFThDGQtJVUg5RymB9Et0CGhuPIrZg5d2-1QLnH-Rr8C-KusjOrw9JKCEiA/s320/GOZQNCAFHKL63CAZWIRGGCAPE0FR9CAHMYWL5CAMUE06KCAOVS336CAZVG6P9CARLV9KVCAMH2OZNCAT7HOWACASFHZWCCA7RSNCOCAR98ONECAQYMFJ9CAR7NPWUCA5SODNLCA15WOPCCANVGHCDCA7GBHGZ.jpg

     ர்த்தோ ஹைட்ரஜன்                          பாரா ஹைட்ரஜன் 

மைப்பில் ஆர்த்தோ மற்றும் பாரா ஹைட்ரஜன்களின் அளவு வெப்ப நிலையைப் பொருத்து மாறுபடுகின்றது. 0 O K வெப்ப நிலையில் பாரா ஹைட்ரஜன் மிகவும் நிலைப்புத்தனத்துடன் இருக்கின்றது. காற்றை நீர்மமாக மாற்றும் நிலை மாற்று வெப்ப நிலையில் ர்த்தோ-பாரா ஹைட்ரஜன்களின் செழுமை விகிதம் 1:1, அறை வெப்ப நிலையில் இத் தகவு 3:1 ஆக மாற்றம் பெறுகின்றது. வெப்ப நிலையை எவ்வளவு உயர்த்தினாலும் இத் தகவு இதற்ககு மேல் மாற்றம் பெறுவதில்லை.தூய பாரா ஹைட்ரஜனை 20 o K வரை குளிர்வூட்டிப் பெற முடியும். எனினும் 75 % விழுக்காட்டிற்கு மேல் ஆர்த்தோ ஹைட்ரஜன் இருக்குமாறு ஹைட்ரஜன் ளிமத்தைப் பெறவே முடியாது
புரோட்டான் நேர் மின்னூட்டம் கொண்ட துகள் தற்சுழற்சி காரணமாக இது ஒரு காந்தத் திருப்புத் திறனைப் பெற்றிருக்கும். அதனால் அதைச் சுற்றி ஒரு காந்தப்புலத்தை உருவாகிக் கொள்ளும். ஆர்த்தோ  ஹைட்ரஜனில் இந்த காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்கிவிடுகின்றது.வட தென் காந்த முனைகள் ஒரே பக்கத்தில் இருக்க இரு காந்தங்களையும் நெருக்கமாகக் கொண்டு வர முடியாது. அதிக ஆற்றல் பெற்றிருந்தால் மட்டுமே அப்படி நெருக்கமாகக் கொண்டு வரமுடியும். ஆனால் பாரா ஹைட்ரஜனில் காந்த முனைகள் ஒன்றுக்கொன்று மாறி இருப்பதால் தாழ்ந்த ஆற்றல் நிலையில் இருக்கும். வெப்ப நிலையை உயர்த்த காந்த முனைகள் திசை மாறி ஆர்த்தோ  ஹைட்ரஜனா நிலை மாறும்.

ஹைட்ரஜன் ணுவிலும்  ஆர்த்தோ(Ortho)மற்றும் பாரா(Para) ஹைட்ரஜன் போ  இரு  நிலைகள் உள்ளன.. இவற்றை p-நிலை (கோண உந்தம் 1- புரோட்டானும் எலெக்ட்ரானும் இணையான தற்சுழற்சியையும், எதிரிணையான காந்தத் திருப்புத் திறனையும் பெற்றிருக்கும்.) என்றும் s- நிலை (கோண உந்தம் 0 புரோட்டானும் எலெக்ட்ரானும் எதிரிணையான தற்சுழற்சியையும், இணையான காந்தத் திருப்புத் திறனையும் பெற்றிருக்கும்) புரோட்டான் எலெக்ட்ரானின் தற்சுழற்சி ஒன்றுக்கொன்று எதிராக இருப்பின் தைப் பாரா நிலை என்றும் இணையாக இருப்பின் ஆர்தோ நிலை என்றும்  கூலாம்.அறை வெப்ப நிலையில் இயற்கை ஹைட்ரஜனில் 25% பாராவும், 75 %ஆர்த்தோவும் உள்ளன.இவற்றின் ஆற்றல் வேறுபட்டிருப்பதால், இயற்பியல் பண்புகளும் மாறு பட்டிருக்கின்றன.பாரா நிலை ஹைட்ரஜனின் உறை மற்றும் கொதி நிலைகள் சாதாரண
ஹைட்ரஜனை விட 0.1 டிகிரி செல்சியஸ் தாழ்வாக இருக்கிறது. இதில் ஆர்தோ நிலை ஹைட்ரஜனில் காந்தக் ர்ச்சி விசை வலிமையா இருப்பதால் பிணைப்பாற்றல் (binding energy) அதிகம். இரு வேறு
ஆற்றல் நிலைகளுக்கு இடையே ஏற்படும் நிலை மாற்றத்தினால் உமிழப்படும் ஆற்றலின் அலைநீளம் 21.1
செ. மீ. அதிர்வெண் 1420.4 மெகா ஹெர்ட்ஸ் இது ரேடியோ வானவியலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


No comments:

Post a Comment