Wednesday, February 3, 2021

எல்லோரும் திருடர்களாக இருக்கின்றார்கள். திருடுதல் என்பது எல்லோரிடமும் ஒரு மறைவொழுக்கமாக இருக்கின்றது .பெரும்பாண்மையினரின் ஒழுக்க நெறியாக மாறிவிட்டதால் அதை இனி ஒழுக்க முடியாது. எப்படி கொரானாவோடு வாழ ப்பழகி கொண்டோமோ அது போல ஊழல் மாற்று திருட்டுச் சமுதாயத்தோடும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று திருட்டை நியாப்படுத்துவோர்  இன்றைக்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள், .திருடுவதற்குத்தான் தைரியம் வேண்டும் ,பிடிபடாமல் தப்பிக்கவும் நல்லவன் போல நடிக்கவும்  திறமை வேண்டும்..எனவே திருடுவது பிச்சை எடுப்பதை விட  மேலானது என்று சில பகுத்தறிவாளர்கள் கூறுவார்கள்.
எல்லோரும் திருடர்களாகவே இருக்கட்டும் .அது நாம் செய்த பிழை. திருடியவர்கள் திருட்டை நியாயப்படுத்தவும் காப்பவர்கள் திருட்டைக் கவனிக்காமல் விட்டுவிட்டதும் நாம் நெடுங்காலமாகச் செய்து வரும் தவறு .எல்லோரும் திருடனாகவே இருப்பதால் நீங்களும் திருடனாக இருக்க  விரும்புகின்றீர்களா? என்று அவர்களிடம் கேள்வி கேட்டால் அதற்குத் தெளிவான , உறுதியான பதில் கிடைப்பதில்லை. அதாவது எந்தக் கொள்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாரோ அதை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுகின்றது எதோ ஓர் உள்ளுணர்வு "ஆம், நானும் திருடனாக விரும்புகின்றேன்". என்று சொல்வதைத் தடுக்கின்றது. அது உண்மையில் இயற்கை தந்த உள்ளுணர்வு .அதை மறைத்துவிடலாம் ஆனால் எந்த நிலையிலும் ஒழித்துக் கட்ட முடியாது .

No comments:

Post a Comment