Sunday, February 14, 2021

பானை புதியதாக இருந்தாலும் ,அது ஓடையில்லாமல் இருக்கவேண்டும். அதன் அடிப்பகுதியில் ஓட்டை இருந்தால் அந்தப் பானையால்  பயனேதுமில்லை..பானையில் ஓட்டை இருந்தால் அதில் தண்ணீர் சேமித்து  வைத்து மக்களுக்குப் பயன் படுத்தமுடியாது . நீரை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.
பானையைப் பயன்படுத்தும் போது பழுதடைய  வாய்ப்புண்டு .ஓட்டை விளிம்பில் இருந்தால் பொறுத்துக்கொள்ளலாம்.அடியில் ஓட்டையிருப்பது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை .  அடியில் ஓட்டை இருந்தால் விரைவில் வழிந்தோடி நீர் காணாமற்போய்விடும்.  அடியில் ஓட்டையிருக்கும் ஓட்டைப் பானை போன்றவர்கள் இந்திய அரசியல்வாதிகள் .அவர்களால் இந்தியப் பொருளாதாரம் காணாமற் போய்க்கொண்டிருக்கிறது
பானையில் ஓட்டையிருந்தால் அதை அடைத்துப் பயன்படுத்தவேண்டிய பொறுப்பும்  , புதிய பானை வாங்கிப் பயனுக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் பானையின் உரிமையாளருக்கு உண்டு. பழைய ஓட்டைப் பானைக்கு புதிய ஓட்டைப் பானை மாற்றாகாது .சரியான பானையைத் தேர்வுசெய்து வாங்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பழுதில்லாத பானையை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

No comments:

Post a Comment