Thursday, February 4, 2021

வெப்பம் என்பது ஒருவகையான ஆற்றல். வெப்பத்தை பொருட்கள் உட்கவரும்போது அதன் அகவியக்க ஆற்றலும் ஒரு வரம்பிற்கு அப்பாற்பட்டு புறவியக்க ஆற்றலும் அதிகரிக்கின்றன..அகவியக்க ஆற்றலை பொருளோடு தொர்புகொள்ளாமல் புறத்தோற்றத்தால் மட்டும் அறிந்துகொள்ள முடிவதில்லை.
வெப்பமானது ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ,கடத்தல் , சலனம் மற்றும் கதிர்வீச்சு என்ற மூன்று வெவ்வேறு வழிமுறைகள்  மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது .சிந்தனைகளுக்கும் , தொடரும் செயல்களுக்கும் ஆதாரமான எண்ணங்களும் இந்த வெப்பம் போலவே சமுதாயத்தில் பரவுகின்றன .முதலாவது உள்ளுணர்வு .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ,வயதுக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப எல்லோரிடமும் இயற்கையாகவே இருக்கின்றது. .பிறந்த குழந்தை தாயிடமிருந்து பால் குடிப்பது அதன் உள்ளுணர்வு தூண்டிய செயல்.. குழந்தைப்பருவதற்குப் பிறகு இது மரபு வழியில் தொடர்கின்றது .எது நல்லது எது கெட்டது என்று தெரிவித்து  எதை  ஏற்றுக்கொள்ளவேண்டும் எதை  விட்டுவிடவேண்டும் என்று உணர்த்துவது இந்த உள்ளுணர்வே.  இந்த உள்ளுணர்வு வெப்பக்க கதிர்வீச்சு போன்றது .புற மூலக்கூறுகளுடன் அல்லது அணுக்களுடன்  தொடர்புகொள்வதால் வெப்பம்  , கடத்தல் மற்றும் சலனம் என இரு விதமாக கடத்தப்படுகிறது .மக்கள் மக்களுடன் நெருக்கமாய்த்  தொடர்புகொள்ளும் போது .அவர்களுடைய உரையாடல் மற்றும்  அறிவுரையால் அவர்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஏற்றுக்கொண்டு பின்பற்றும் வாய்ப்பைப் பெறுகின்றார்கள் . இது வெப்பக் கடத்தல் போன்றது. சமுதாயத்தைப் பார்த்து ஒருவர் தானாகக் கற்றுக்கொள் வதும் உண்டு. இது வெப்பச் சலனம்  போன்றது .
ஊழல் புரியவேண்டும் என்ற  உள்ளுணர்வு  எந்த முயற்சியும் செய்யாமல் ஊழல் புரிவதற்கான வாய்ப்பு  தானாகக் கிடைக்கும் போது பெரிதும் தூண்டப்படுகிறது ..இப்படிப்பட்ட வாய்ப்புக்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே கிடைக்கின்றது .மக்களுக்கு இந்த வாய்ப்பு இல்லாததால் இந்த உள்ளுணர்வை கதிர்வீச்சு மூலம் அரசியல்வாதிகளிடமிருந்தும் , அரசு அதிகாரிகளிடமிருந்தும் வளர்த்துக் கொள்கின்றார்கள். .மேலும் ஊழல் செய்வேண்டும் என்ற எண்ணம் ஊழல் புரிந்தவர்களிடமிருந்துதான்  ஊழல் புரியப்போகின்றவர்களுக்கு பரவுகின்றது என்ற உண்மையை இது தெரிவிக்கின்றது .அரசியல்வாதிகளிடம் அரசு அதிகாரிகளுக்கும் , அவர்களிடமிருந்து மக்களுக்கும் இந்த ஊழல் எண்ணம் பரவுகின்றது.இந்தப் பரவலைத் தடுக்க வேண்டுமென்றால் ஊழல் புரியும் எண்ணத்திற்கு ஒப்பான கதிர்வீசும் பொருளின்  வெப்பம் தணிக்கப்படவேண்டும் .
கதிர்வீச்சினால் வெப்பம் ஏற்றப்பட்டு பொருளின் வெப்பநிலை உயர்ந்தால்,அது கடத்தல் மூலமும் சலனம் மூலமும் சமுதாயத்தில் பரவிச் செல்வதைத் தடுக்கமுடியாது. மக்களிடம் கடத்தல் மற்றும் சலனம் மூலம் பரவும் ஊழல் புரியும் என்ணங்களுக்கு மூலமாக இருப்பது அரசியவாதிகளாலும்  அரசு அதிகாரிகளாலும் கதிர்வீச்சு மூலம் பரப்பப்படும் ஊழல் எண்ணங்களே.

No comments:

Post a Comment