Wednesday, August 24, 2022

ஒளி இழைகள்

 

ஒளி இழைகள் (optic fibre)

 

ஒளியிழை என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியைக் கடத்தும் இழை. இது ஓர் அலைநடத்தி போன்று செயல்பட்டு  இழையின் இரு முனைகளுக்கிடையே ஒளியைக் கடத்தும் தன்மையுடையது. பொறியியல் பிரிவில் ஒளியிழைகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் இழை ஒளியியல் (fiber optics) என அழைக்கப்படுகின்றது. இதன் பயன்பாடு செய்தித் தொடர்பு மற்றும்  பரிமாற்ற வழிமுறைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றது கணினியின் புள்ளி விவரங்களையும், , தொலைபேசியின் சமிக்கையலைகளையும்   ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல ஒளியிழைகள் பயன்படுகின்றது. ஒளியில் அலைபண்பேற்றம் செய்யப்பட்ட சமிக்கையலை கடலடியே கண்டம் விட்டு கண்டம் கடந்து செல்கின்றன . அதே போல உடலின் உள்ளுறுப்புக்களைச்  சோதனை செய்து , படம் பிடித்துக் காட்டவும்  பயன்படும் ஒளியிழைநோக்கி (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை  பயன்படுகின்றது.

        திறந்த வெளியில் சமிக்கை அலைகள் ஏற்றப்பட்ட ஒளி அலைகளை ப் பரப்பிய போது அதன் பயனுறு திறன் மழை. மூடு பனி . வெப்பநிலையால் காற்றின் அடர்த்தியில் ஏற்படும் வேறுபாடுகள் ,தூசி போன்றவற்றால் பாதிப்படைகின்றது .மின் கம்பிகள் போன்று வழித்தடம் இருந்தால் ஒளியியல் செய்தித் தொடர்பின் பயனுறு திறனை அதிகரிக்கமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் ,அது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டனர். அலைபண்பேற்றம் செய்யப்பட்ட ஒளியலைகளுக்கு ஒருவழிச் செலுத்தியாக, வழித்தடமாகச் செயல்படுவது ஒளியிழைகளாகும். ஒளியலைகள்  அதிர்வெண் மிக்கவை ரேடியோ அலைகள் மற்றும் நுண்ணலைகளை விட அதிக அகலவிரிவுப் பட்டையைக் (band width) கொண்டுள்ளது ஆகையால், கூடுதலான செய்திகளை ஏற்றிச் செலுத்த இயலும்.. 2010 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புக ளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வியப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது..இங்கு செப்புக் கம்பிகளுக்கு மாறாக கண்ணாடியிழைகள் பயன்படுத்தப்படுகிறன, ஏனென்றால் சமிக்கை அலைகள் இதனுள் பயணிக்கும் பொழுது அதன் ஆற்றல் குறைவாகவே இழக்கிறது;

ஒளியிழை வடிவமைப்பும்  செயல் முறையும்

ஒளியிழையில் உள்ளகம் (Core) என்ற உள்ளுறை மற்றும் அதை முழுமையாகக் கவர்ந்துள்ள காப்புறை  என்ற வெளியுறை (Cladding) உள்ளன. இவையிரண்டும் ஒரே மூலப்பொருட்களால் ஆனதாக இருந்தாலும் அல்லது வேறுபட்ட மூலப்பொருட்களால் ஆனதாக இருந்தாலும் அவற்றின் ஒளிவிலகல் எண்ணில் குறிப்பிடும்படியான வேறுபாடு இருக்குமாறு அதாவது உள்ளத்தின் ஒளிவிலகல் எண் காப்புறையின் ஒளிவிலகல் எண்ணைவிட அதிகமாக இருக்குமாறு, தகுந்த வேற்றுப்பொருட்களை கலந்து கொள்வார்கள். ஈரப்பதம் , வெப்பநிலை போன்றவற்றால் பதிப்படையாவண்ணம் ,காப்புறையை பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் போர்வைபோலச் (Jacket) சுற்றி அமைத்துக் கொள்வார்கள்.

 

ஒளியிழைகள் சிலிகா என்ற கண்ணாடியுடன் சில உலோக ஆக்சைடுகளைச் சேர்த்தும். நெகிழியாலும்  தயாரிக்கிறார்கள். கண்ணாடி  இழைகளில் உள்ளகம் சிலிகான் ஆக்ஸைடா லும் காப்புறை சிலிகான் ஆக்ஸைடு -பாஸ்பரஸ் ஆக்ஸைடு கலவையாலும் ஏற்படுத்திக்கொள்வார்கள். உள்ளகம் சிலிகான் ஆக்ஸைடு மற்றும் ஜெர்மானியம் ஆக்ஸைடு இவற்றின் கலப்பாக இருந்தால் காப்புறையை  சிலிகான் ஆக்சைடாக அமைத்துக்கொள்வார்கள்.. பிளாஸ்டிக் ஒளியிழைகளில் உள்ளகம் பல்ம ஸ்டைரீன் (Poly Styrene ) என்ற நெகிழியாலும் காப்புறை மீதைல் மீத்தா கிரை லேட்  (Methyl metha crylate )என்ற நெகிழியாலும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். பிளாஸ்டிக் ஒளியிழைகளுக்கு ப் பலவிதமான நெகிழிகள் பயன்படுகின்றன

 

ஒளியலை  முழு அக எதிரொளிப்பு (Total internal reflection ) என்ற செயல்முறையில் ஒளியிழை வழி கடந்து செல்கின்றது. ஒளி ஓர் ஊடகத்தில் நேர்கோட்டில் பயணிக்கும். ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குக் கடந்து செல்லும் போது ,அவற்றின் ஒளிவிலகல் எண்களின் வேறுபாட்டிற்கு ஏற்ப ஒளிவிலக்கத்தைப் பெறுகின்றது ...இது ஒளிவிலகல்  எண் குறைந்த ஊடகத்திலிருந்து ஒளிவிலகல் எண்  மிகுந்த ஊடகத்திற்குச் செல்லும் போது நிகழ்கின்றது . ஒளிவிலகல் எண்  மிகுந்த ஊடகத்திலிருந்து ஒளிவிலகல்  எண் குறைந்த ஊடகத்திற்குச் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட படுகோணத்திற்கு உட்பட்ட கோணங்களில்  விழும் ஒளி முழுவதுமாக எதிரொளிக்கப்பட்டுவிடுகின்றது . அது அடுத்த ஊடகத்திற்கு கடந்து செல்வதில்லை. ஒளியிழை அந்நிலையில் அலைச் செலுத்தி போலச் செயல்படுகின்றது. மின்கம்பி வளைந்து நெளிந்திருந்தாலும் அதன்வழிச் செல்லும் மின்சாரம் உள்வாயிலிருந்து வெளிவாய் வரை கசிவின் றிச் செல்கின்றது. அது போல ஒளியிழை வளைந்து நெளிந்து சுருண்டு இருந்தாலும்  ஒளி அதன் அச்சை ஒட்டியே கடந்து செல்கின்றது .

 

 

ஒளியிழைகளில் ஒளி பரவும் முறை பொருத்து அதை ஒற்றைப் (Single Mode) பரவல் ஒளியிழை என்றும், பலவகைப்  பரவல் ஒளியிழை என்றும் கூறலாம். பலவகைப்  பரவல் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், ஓரளவு குறுகிய  தொலைவுத் தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்துள்ளது. ஒற்றைப் பரவல் ஒளியிழைகள்  1 கி. மீ   மேற்பட்ட தூரத்திற்குப் பயன்படுகின்றது ..

Uploading: 153674 of 153674 bytes uploaded. 

ஒளியிழைகளில் ஒளி பரவும் முறை பொருத்து அதை ஒற்றைப் (Single Mode) பரவல் ஒளியிழை என்றும், பலவகைப்  பரவல் ஒளியிழை என்றும் கூறலாம். பலவகைப்  பரவல் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், ஓரளவு குறுகிய  தொலைவுத் தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்துள்ளது. ஒற்றைப் பரவல் ஒளியிழைகள்  1 கி. மீ   மேற்பட்ட தூரத்திற்குப் பயன்படுகின்றது ..

Wednesday, August 3, 2022

உராய்வு

 

 இயற்பியலார் ,வேதியியலார் , உலோகவியலார் ,பொறி ஞர்கள் ,மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் உராய்வில் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். .ஏனெனில் உராய்வு ஒரு இயந்திரத்தின் பயனுறு திறனைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும் உராய்வினால் தேய்மானம் ஏற்பட்டு பொருள் இழப்பும் ஏற்படுகின்றது. .அதனால் இயந்திர யுகம் தோன்றிய காலத்திலிருந்தே மக்கள் உராய்வைக் குறைக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். 

       உராய்வு  நண்பனா இல்லை பகைவனா என்று கேட்டால்  சில சமயங்களில் நண்பனாகவும்  சில சமயங்களில் பகைவனாகவும் செயல்படுகின்றது என்று தான் கூறவேண்டியிருக்கின்றது .உராய்வின்றி நாம் நடக்கவே முடியாது .ஓட முடியாது. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் , தானியங்கு வண்டிகள் ,வேகத்தைக் குறைக்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ இயலாது.நெய்யப்பட்ட துணியில் நூல் இழைகள் நழுவாது ஒன்றுடன் ஒன்று பற்றிக்கொண்டு இருக்கமுடியாது ..மரம் ஏற்கமுடியாது. பரத்தில் அறையப்பட்ட ஆணி உறுதியாக நிலைத்திருக்க முடியாது .எனவே  இயந்திரத்தின் இயக்கங்களினால் ஏற்படும் தேய்மானத்தால் உராய்வு வேண்டாம் என்று நினைத்தாலும் உராய்வு நம்முடைய இயல்பான வாழ்க்கைக்கு அவசியத் தேவையாகின்றது.

            இயந்திரப் பொறிகளில் விரும்பாத உராய்வைக் குறைத்துக் கொள்ள தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் . தாழ்ந்த உராய்வைத் தரும் சிறப்புப் பொருட்களைப் பயன்படுத்தியோ அல்லது இடைப் பரப்புக்களை மசகிட்டோ இதைச் செய்யலாம் .மற்றொரு வழி வடிவமைப்பை தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்வதாகும்.எடுத்துக்காட்டாக நழுவுதலை சுழலிய க்கமாக   மாற்றிக் கொண்டால் உராய்வு பெருமளவு குறைகின்றது. 

தானியக்க இயந்திரப் பொறிகளில் ( கார். ஆலை இயந்திரங்கள். சுழலிகள் ) 20 சதவீதமும் .எஞ்சின்களால் இயங்கும் வான வூர்தி களில் 10 சதவீதமும் பீற்று வளி ஊர்திகளில் 1.8 முதல் 2 சதவீதமும் உராய்வினால் ஆற்றல் இழப்பு ஏற்படுகின்றது .ஆற்றல் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நாளில் ஆற்றல் இழப்பு ஒரு  பிரச்சனையாக இருப்பினும் அது மிகப் பெரிய இடையூறு இல்லை .உராய்வினால் ஏற்படும் தேய்மானம் மற்றும் பழுதுகளே பேரிழப்பைத் தருகின்றன..உராய்வு அதிக வெப்பத்தையும் தருகின்றது. வெப்பத்தை நீக்கிக்கொள்ள முயற்சிகள் தேவை ப்படுகின்றன.

நாம் நம்முடைய இரு உள்ளங் கைகளையும் ஒட்டி  வைத்து உரசித் தேய்க்கும் போது வெப்பம் உண்டாவதை உணர்ந்திருக்கின்றோம் .. உராய்வை எதிர்ப்பதற்காகச் செய்யும் வேளையில்  ஒரு பகுதி வெப்பமாக வெளிப்படுகின்றது . சூட மரக்கட்டையாலான இரு மரத் துண்டுகளை உராய் வுறு மாறு  தொடர்ந்து தேய்த்தால் அவை தீப்பற்றிக் கொள்ளும் .ஆதிமனிதன் தீயைப் பற்றி தெரிந்து கொண்டது சிக்கி முக்கிக் கல்லை உரசித் தேய்க்கும் போது தீப்பொறி ஏற்படுவதைப் பார்த்துத்தான் .தீக்குச்சியை தீப்பெட்டியோடு உரசும் போது ஏற்படும் உராய்வு தரும் வெப்பம் தீக்குச்சியின் தலையில் உள்ள வேதிப்பொருளை எரியச் செய்கின்றது. 

           விமானம் ஓடு தளத்தில் தரையிறங்கும் போது அதன் வேகத்தை மட்டுப்படுத்த தன்னியக்கத் தடையூட்டுவார்கள் .அப்போது தன்னியக் கத் தடையூட்டும் பகுதிகள் சூடாக்கிச் சிவந்து ஜொலிக்கும் . தேய்மானம் சிறியளவாக இருப்பினும் இந்த உயர் வெப்பநிலை தன்னியக்க த் தடையூட்டும் பகுதியிலுள்ள மூலப்பொருட்களை ச் சிதைத்து விடுகின்றன. உலோகம் உருகி விட்டால்  அப்பகுதி உறுதித் தன்மையை இழந்து மென்மையாகிவிடுகின்றது .உயர் வெப்பநிலையால் சில பகுதிகள் தங்களுடைய இயல்புத் தன்மையை நிரந்தரமாக இழந்துவிடுவதும் உண்டு, இதனால் இயந்திர அதிர்வுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் விபத்துக்களை ஏற்படுத்திவிட வாய்ய்புண்டு. உயர் வெப்பநிலையில் மசகு செயலிழந்து போகலாம் .அப்போது உராயும் பகுதிகள் அதிகமான தேய்மானத்திற்கு உட்படுகின்றது . தேய்மானமும் உராய்வினால் ஏற்படும் வெப்பமும் வானவூர்தி இயந்திரங்களின் செயல்திறனையும் பயன்தரு காலத்தையும் தீர்மானிக்கின்றன

Tuesday, August 2, 2022

கிராபீன் பயன்பாடுகள்

     இன்றைக்கு ,குறைந்த வழுக்களைக்  கொண்டுள்ள கிராபீனை விரைவாகவும் , பேரளவிலும் , உற்பத்தி செய்யும் சில நவீன வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளார்கள் கிராபைட்டை அயனிகள் நிறைந்த நீர்மத்தில் கரைத்து கேளாயொலியைக் கொண்டு  (ultrasonic exfoliation) கிராபீன் தகட்டைப் பெறுகின்றார்கள். கார்பன் நுண்மைக் குழல்களை வெட்டியும் கிராபீன் தகடுகளைப் பெறலாம்.. பலவடுக்குகளைக் கொண்ட கார்பன் நுண்மைக் குழல்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் கந்தக அமிலத்தைக் கொண்டு கிராபீன் தகடுகளாகப் பெறும் வழிமுறை இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. கிராபீன் ஆக்ஸைடை ஆக்சிஜநீக்க வினைக்கு (Graphite oxide reduction) உட்படுத்தி கிராபீனைப் பெறும் வழிமுறை 1962 ஆம் ஆண்டு வாக்கில் பின்பற்றப்பட்டது. லித்தியம் குளோரைடு போன்ற உருகிய உப்புகள் கிராபைட்டை அரித்தெடுத்து பலவிதமான கிராபீன் மற்றும் நுண்மை வடிவங்களை உண்டாக்குகின்றது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் கிராபீன் குறைபாடுகள் ஏதுமின்றி ஒத்த தன்மைகொண்டதாய்  இருக்கின்றது. மின்வேதியியல் தொகுப்பாக்கம் (Electro chemical synthesis )மூலம் கிராபீனை உற்பத்திசெய்யலாம்மாறுபடும் துடிப்பு மின்னழுத்தம் (pulsed voltage ) கிராபீனின் தடிப்பு ,பரப்பெல்லை ,வழுக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. சக்கரைப் பொருட்களைக் கொண்டும் கிராஃபீனைத் தயாரிக்கிறார்கள். இது எளிமையானது மட்டுமின்றி சுற்றுச் சூழலுக்கு நட்பானதுமாகும். டாங் லாவ் முறை  (Tang-Lau Method) எனப்படும் இவ்வழிமுறை மூலம் ஒற்றை அடுக்கு முதல் பலவடுக்குகளைக் கொண்ட கிராபீன் தகடுகளை உருவாக்கலாம். நுண்ணலை ஆற்றல்(Micfrowave energy)   நேரடியாகவே கிராபீனைத் தொகுப்பாக்கம் செய்கின்றது. இதில் பிற வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை. விரைந்து உற்பத்தி செய்யவும் முடிகின்றது. சிலிகான் கார்பைடை(siC) தாழ்ந்த அழுத்தத்தில்  11000 C  வெப்பநிலையில்  பகுத்து சிலர் கிராபினை உற்பத்தி செய்கின்றார்கள். ஆவிப்  படிமை  (vapour  deposition )  மூலம் படிகங்களை வளர்த்து உருவாக்குவதைப்போல கிராபினையும் வளர்த்து ப் பெறமுடியும். கார்பன் டை ஆக்ஸைடு வளிமத்தில் மக்னீசியத்தை எரித்து ஆக்சிஜ நீக்க வினையைத் தூண்டி கிராபீன் துகள்களை ஏற்படுத்தமுடியும். இதில் அதிக வெப்பம் தோற்றுவிக்கப்படுகின்றது. கார்பன் டை ஆக்ஸைடு அகச்சிவப்புக்கதிர் லேசர் மூலம் கிராபீனை உற்பத்தி செய்யும் வழிமுறையும் இன்றைக்குப் பின்பற்றப்படுகின்றது.

கிராபீன் பயன்பாடுகள்

            கிராபீன் ஒளி உட்புகக் கூடிய பயன்பாட்டிற்கு இணக்கமான மின் கடத்தியதாக இருப்பதால் பல சாதனங்களைநவீனப்படுத்தவும் ,மேம்படுத்தவும் பயன்படுகின்றது. உடன் உணர் கருவிகள் சூரிய மின்கலங்கள் . ஒளி உமிழ்வு டையோடுகள். கை பேசிகளுக்கான தொடுதள  முகப்புக்கள்  போன்றவற்றில் கிராபீனின் பயன்பாடு இன்றைக்கு அதிகரித்து வருகின்றது. ஒளி அச்சுப் பொறிகளுக்கான கார்பன் துகளில் கிராபீனை ஒன்று கலந்து பயன்படுத்துகின்றார்கள். மின்னணுவியல் . உயிரியல் தொழிநுட்பம், மருத்துவம் , மிக மெல்லிய ஆனால் அதிக பளுவைத் தாக்குப் பிடிக்கும் வலுவான மூலப்பொருட்கள். ஒளிமின்கலன்கள், ஒளி விளம்பரத் தட்டிகள்பிரகாசமான, அரிமானத் தடை கொண்ட  வர்ணங்கள். திண்ம மசகுப் பொருட்கள், முப்பரிமாண அச்சிடும் முறை    மற்றும் ஆற்றல் சேமிப்பு வழிமுறை போன்ற தொழில் துறைகளில் கிராபீன் பயன்படுகின்றது. 100  நாளோ மீட்டர் தடிப்புள்ள கிராபீன்  3 கிகி/வி என்ற வேகத்தில் பாயும் நுண் துப்பாக்கி குண்டுகளைத் தடுத்து விடுகின்றது. இது AK 47 துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டுகளின் வேகத்தை விட அதிகமானது இதனால் கிராபீனைக் கொண்டு இராணுவ வீரர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களைத் தயாரிக்கின்றார்கள் . கூடுதல் திறன்மிக்க நவீன இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய  கிராபீன் நம்பிக்கை அளித்திருக்கின்றது

கிராபீனின் சிறப்பியல்புகள்

 

கிராபீனின்  சிறப்பியல்புகள்

உலகிலேயே மிகவும் மெல்லிய பொருளான கிராபீன், உலகிலேயே மிகவும் உறுதியான பொருளும் கூட! (எஃகை விட இது 100 மடங்கு உறுதியானது)/ ஒரு மில்லிமீட்டர் தடிமனுள்ள கிராபைட்டில் மூன்று மில்லியன் கிராபீன் அடுக்குகளை வைக்க முடியும்; அவ்வளவு மெலிதான பொருள் இது. கிராபீனைக் கொண்டு சுழிப்பரிமாணப் பொருளான புல்லரீன், ஒரு-பரிமாணப் பொருளான கரிம நேனோகுழாய், முப்பரிமாணப் பொருளான கிராபைட் ஆகியவற்றை உருவாக்க இயலும். ஏறக்குறைய முழுமையான ஒளி-ஊடுருவுந் தன்மையுடன் இருந்தாலும், இது மிகுந்த அடர்த்தி கொண்டுள்ளதால், மிகச்சிறிய அணுவான ஒரு ஹீலியம் அணு கூட இதனுள் ஊடுருவ முடியாது..

இது தாமிரத்தையொத்த மின்கடத்துத் தன்மை கொண்டது; இதன் வழியாகப் பாயும் மின்னோட்டம் மிகச்சிறியளவு ஆற்றலையே இழப்பதாலும் கட்டமைப்பதற்கு எளியதாக  இருப்பதாலும் தொகுப்புச் சுற்றுகள் (integrated Circuits) உருவாக்குவதில் எதிர்காலத்தில் கிராபீன் பெருமளவு பங்களிக்கக் கூடும். என்று கூறுகின்றார்கள். கிராபீனின் அணித்தள விடை வெளியின் ஊடாக எலெக்ட் ரான்கள் மோதல்கள் ஏதுமின்றி எளிதாகக் கடந்து செல்கின்றன. .இதில் பாயும் எலக்ட்ரான்கள் ஒளித்துகளான போட்டானைப் போன்று செயல்படுகின்றன; அதாவது, கிட்டத்தட்ட நிறையற்ற துகளைப் போல. இதனால், மிகப்பெரிய துகள் முடுக்கிகள் பெரும் ஆற்றலைச் செலவிட்டு செய்யக்கூடிய வேலையை கிராபீனால் மிக எளிதில் செய்ய முடியலாம் என்று கூறுகின்றார்கள்

          நுன்மைப் பொருட்களில் கிராபீன் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. அதற்குக் காரணம் அதன் மிகுதியான வலிமை ,மின் கடத்தும் திறன், ஒளி உட்புகு திறன் போன்றவைகளாகும். கிராபீன் மட்டுமே இரு பரிமாண வெளியில் உள்ள மிக மெல்லிய தடிப்புள்ள பொருளாகும்

அறை வெப்பநிலையில் கிராபீனில் எலெக்ட்ரான்கள் கூடுதலான நகர் திறம் (Mobility ) கொண்டுள்ளன. கிராபீனில்  எலெக்ட்ரானும் ,நேர்மின் துளையும் (hole ) ஏறக்குறைய  ஒரேயளவு நகர் திறனைக் கொண்டுள்ளன. 10 – 100 K வெப்பநிலை நெடுக்கையில் இதன் நகர்வு திறன் வெப்பநிலையைச் சார்ந்து இருப்பதில்லை. அறைவெப்பநிலையில் மிக க் குறைந்த அளவில் மாற்றம் ஏற்படுகின்றது. இது அணித்தள அதிர்வுகள்  எலக்ட்ரான்களின் சிதறலில் ஏற்படுத்தப்படும் விளைவேயாகும்.. கார்பன் அணுவின் பரிமாணத் தடிப்புடைய கிராபீனின் மின்தடைமை (resistivity )     10-6 ஓம்.செமீ. இது வெள்ளியின் மின்தடைமையை விட மிகவும் குறைவு. அறைவெப்பநிலையில் மிகக் குறைந்த மின்தடைமையைக் கொண்டது கிராபீனேயாகும்.

      கிராபீனின் மின்புல உட்புகு திறன் (permittivity)  நுண்ணலை முதல் மில்லிமீட்டர் அலை வரை அதிர்வெண்ணைப்பொருத்து  மாறுபடுகின்றது. இதனால் அதிக அளவு மின்னாற்றலைச் சேமித்து வைக்கக் கூடிய மின் தேக்கிகளை கிண்றபீனைக் கொண்டு உருவாக்க முடியும் என்று கூறுகின்றார்கள்.