Tuesday, August 2, 2022

கிராபீன் பயன்பாடுகள்

     இன்றைக்கு ,குறைந்த வழுக்களைக்  கொண்டுள்ள கிராபீனை விரைவாகவும் , பேரளவிலும் , உற்பத்தி செய்யும் சில நவீன வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளார்கள் கிராபைட்டை அயனிகள் நிறைந்த நீர்மத்தில் கரைத்து கேளாயொலியைக் கொண்டு  (ultrasonic exfoliation) கிராபீன் தகட்டைப் பெறுகின்றார்கள். கார்பன் நுண்மைக் குழல்களை வெட்டியும் கிராபீன் தகடுகளைப் பெறலாம்.. பலவடுக்குகளைக் கொண்ட கார்பன் நுண்மைக் குழல்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் கந்தக அமிலத்தைக் கொண்டு கிராபீன் தகடுகளாகப் பெறும் வழிமுறை இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. கிராபீன் ஆக்ஸைடை ஆக்சிஜநீக்க வினைக்கு (Graphite oxide reduction) உட்படுத்தி கிராபீனைப் பெறும் வழிமுறை 1962 ஆம் ஆண்டு வாக்கில் பின்பற்றப்பட்டது. லித்தியம் குளோரைடு போன்ற உருகிய உப்புகள் கிராபைட்டை அரித்தெடுத்து பலவிதமான கிராபீன் மற்றும் நுண்மை வடிவங்களை உண்டாக்குகின்றது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் கிராபீன் குறைபாடுகள் ஏதுமின்றி ஒத்த தன்மைகொண்டதாய்  இருக்கின்றது. மின்வேதியியல் தொகுப்பாக்கம் (Electro chemical synthesis )மூலம் கிராபீனை உற்பத்திசெய்யலாம்மாறுபடும் துடிப்பு மின்னழுத்தம் (pulsed voltage ) கிராபீனின் தடிப்பு ,பரப்பெல்லை ,வழுக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. சக்கரைப் பொருட்களைக் கொண்டும் கிராஃபீனைத் தயாரிக்கிறார்கள். இது எளிமையானது மட்டுமின்றி சுற்றுச் சூழலுக்கு நட்பானதுமாகும். டாங் லாவ் முறை  (Tang-Lau Method) எனப்படும் இவ்வழிமுறை மூலம் ஒற்றை அடுக்கு முதல் பலவடுக்குகளைக் கொண்ட கிராபீன் தகடுகளை உருவாக்கலாம். நுண்ணலை ஆற்றல்(Micfrowave energy)   நேரடியாகவே கிராபீனைத் தொகுப்பாக்கம் செய்கின்றது. இதில் பிற வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை. விரைந்து உற்பத்தி செய்யவும் முடிகின்றது. சிலிகான் கார்பைடை(siC) தாழ்ந்த அழுத்தத்தில்  11000 C  வெப்பநிலையில்  பகுத்து சிலர் கிராபினை உற்பத்தி செய்கின்றார்கள். ஆவிப்  படிமை  (vapour  deposition )  மூலம் படிகங்களை வளர்த்து உருவாக்குவதைப்போல கிராபினையும் வளர்த்து ப் பெறமுடியும். கார்பன் டை ஆக்ஸைடு வளிமத்தில் மக்னீசியத்தை எரித்து ஆக்சிஜ நீக்க வினையைத் தூண்டி கிராபீன் துகள்களை ஏற்படுத்தமுடியும். இதில் அதிக வெப்பம் தோற்றுவிக்கப்படுகின்றது. கார்பன் டை ஆக்ஸைடு அகச்சிவப்புக்கதிர் லேசர் மூலம் கிராபீனை உற்பத்தி செய்யும் வழிமுறையும் இன்றைக்குப் பின்பற்றப்படுகின்றது.

கிராபீன் பயன்பாடுகள்

            கிராபீன் ஒளி உட்புகக் கூடிய பயன்பாட்டிற்கு இணக்கமான மின் கடத்தியதாக இருப்பதால் பல சாதனங்களைநவீனப்படுத்தவும் ,மேம்படுத்தவும் பயன்படுகின்றது. உடன் உணர் கருவிகள் சூரிய மின்கலங்கள் . ஒளி உமிழ்வு டையோடுகள். கை பேசிகளுக்கான தொடுதள  முகப்புக்கள்  போன்றவற்றில் கிராபீனின் பயன்பாடு இன்றைக்கு அதிகரித்து வருகின்றது. ஒளி அச்சுப் பொறிகளுக்கான கார்பன் துகளில் கிராபீனை ஒன்று கலந்து பயன்படுத்துகின்றார்கள். மின்னணுவியல் . உயிரியல் தொழிநுட்பம், மருத்துவம் , மிக மெல்லிய ஆனால் அதிக பளுவைத் தாக்குப் பிடிக்கும் வலுவான மூலப்பொருட்கள். ஒளிமின்கலன்கள், ஒளி விளம்பரத் தட்டிகள்பிரகாசமான, அரிமானத் தடை கொண்ட  வர்ணங்கள். திண்ம மசகுப் பொருட்கள், முப்பரிமாண அச்சிடும் முறை    மற்றும் ஆற்றல் சேமிப்பு வழிமுறை போன்ற தொழில் துறைகளில் கிராபீன் பயன்படுகின்றது. 100  நாளோ மீட்டர் தடிப்புள்ள கிராபீன்  3 கிகி/வி என்ற வேகத்தில் பாயும் நுண் துப்பாக்கி குண்டுகளைத் தடுத்து விடுகின்றது. இது AK 47 துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டுகளின் வேகத்தை விட அதிகமானது இதனால் கிராபீனைக் கொண்டு இராணுவ வீரர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களைத் தயாரிக்கின்றார்கள் . கூடுதல் திறன்மிக்க நவீன இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய  கிராபீன் நம்பிக்கை அளித்திருக்கின்றது

No comments:

Post a Comment