Thursday, June 8, 2023

Emaatraathe Emaarathe

 

 பொதுவாக இந்திய அரசாங்கத்தால் , அது மைய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறன.உண்மைகள் மறைக்கப்படுவதாலும் ,திரித்துக் கூறப்படுவ தாலும் ,நிறுவனத்தின் உண்மையான பொருளாதார நிலையை மக்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு இலை. 

         அரசு நிறுவனங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன? முதலில் நிறுவனத்திற் காக ஒதுக்கப்படும் நிதியினை அந்த நிறுவனத்தில் வளர்ச்சிக்காகவே செலவு செய்வதில்லை.. செலவு செய்ததாகக் கணக்குக்கு காட்டிவிட்டு  அவர்களே எடுத்துக் கொண்டு விடுகின்றார்கள். உண்மையில் அதற்கான வாய்ப்பைப் அதிகரித்துக் கொள்ள திட்டச் செலவை பல மடங்கு  உயர்திக்கொள்கின்றார்கள் .மிக எளிதாகவும் ,மிக அதிகமாகவும் அரசின் நிதியை  தனதாக்கிக் கொள்ளும் வழிமுறையில் இது முதலிடத்தில் உள்ளது . ஆரசியல்வாதிகளின் திருட்டுத் தனத்தால் அந்த நிறுவனத் தின் உயர்அதிகாரிகளும்,அவர்களுக்குக்கீழ் பணிபுரியும் ஊழியர்களும்  அவர்களுக் குரிய பங்களிப்பைச் செய்கின்றார்கள். ஒரு  ஒழுக்கமற்ற தவறான முதலாளியிடம்  நேர்மையான தொழிலாளி இருக்கவே முடியாது.. தொடக்கத்திலேயே தனக்கான பெரும் பங்கை எடுத்துக்கொண்டுவிடுவதால் , அதிகாரிகளும் ,தொழிலாளர்களும் நிறுவனத்திற்கு ஏற்படுத்தும் இழப்பை  இவர்களால்  கண்காணிக்கவோ அல்லது தடுக்கவோ முடிவதில்லை. நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டம் என்பது தொழில்நுட்ப வளர்ச்சியாகவோ  , தர மேம்பாடாகவோ  . உற்பத்திப் பெருக்கமாகவோ  ,ஏற்றுமதித் எண்ணமாகவோ இல்லாதிருப்பது இந்தியாவின் தூரதிருஷ்டம் அதனால் எவ்வளவு முதலீடு செய்தாலும் ,நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடிவதில்லை . தொடர்ந்து நிறுவனத்தை நடத்துவதற்கும் ,நஷ்டத்தை ஈடுசெய்வதற்கும்  உற்பத்திப் பொருளின் தரத்தை  குறைத்தும் ,விலையை உயர்த்தியும் ,அதுவும் இயலாதபோது பொதுநிறுவனம் என்ற பெயரில் மக்கள் மீது வரி விதிப்பை அதிகரிக்கின்றார்கள் .

      இரண்டாவதாக அந்த நிறுவனத்தின்  மேம்பாடு என்று சொல்லிவிட்டு   தேவையற்ற ஆலோசனைக்  கூட்டங்களை  அதிகப் பொருட்செலவுடன் நடத்துவதும் ,கௌரவப் பதவியுடன் அதிகச் சமபளம்  பெற்றுக்கொள்வதும்  நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது. மூன்றாவதாக அந்த நிறுவனத்துக்காக பணியாளர்களை நியமிக்கும் போது  லஞ்சம் வாங்கிக்கொண்டு  பணிநியமனம் வழங்குகின்றார்கள்.. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான தகுதிமிக்க வல்லுநர்கள் கிடைப்பதில்லை.. கட்டுமானச் செலவில் ஒரு பகுதி முன்கூட்டியே எடுத்துக்கொள்ளப்படுவதால் ,கட்டுமானம் பலவீனமாக அமைந்துவிடுகின்றது .இது எதிர்பாராத விதமாக சிதைந்து அழிந்து பேரழிவை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. முன்னேற்றத்தில் பின்னேற்றம் என்பது எந்த முன்னேற்றத்தையும் ஒன்றுமில்லாததாக்கிவிடும் .

 

No comments:

Post a Comment