Friday, June 9, 2023

emaatraathe emaarathe

 40-50 ஆண்டுகள் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனங்கவர்ந்தவர்களுக்கு  என்ன ஆளுமைத் திறன் இருக்கின்றது என்று  நாம் நம்மை ஆளும் துகுதியை கண்ணைமூடிக்கொண்டு அவர்களுக்கு வாரி வழங்குகின்றோம். நம்முடைய  தவறான மனப்பான்மை சமுதாயத்திற்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது தெரியுமா ? இப்பொழுது அரசியலுக்கு வருபவர்கள் திரைப்படத் துறையில் குறைந்தது 10 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என்ற வழக்கம் நிலைப்படுத்தப் பட்டிருக்கின்றது . சாதி ,மத வேற்றுமையின்றி சமுதாயத் தொண்டாற்றி பெரும்பான்மை மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களே மக்களின் தலைவராக வரமுடியும் என்ற நிலை மாறி சாதி ,மத, மொழி  வேற்றுமையின்றி பெரும்பான்மையினரை ரசிகர்களாகப் பெற்றுவிட்டாலே போதும்  என்ற நிலை உருவாகியுள்ளது  .

நடிப்பவர்களிடம் ஆளுமைத்திறன் சிறிதும் இருப்பதில்லைஅவர்கள் எப்படி நடிக்கவேண்டும் எப்படி பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதெல்லாம்  அதற்குரிய சிறப்பு வல்லுனர்களே .இவர்களுடைய  அந்தரங்க வாழ்க்கையை அணுகிப்பார்த்தால் அவ்வளவு  அசிங்கங்களும் உள்ளடங்கியிருக்கும் .வரம்பு மீறிய காதல் தொடர்புகள், மதுப் பழக்கம்,   வருமான வரி ஏய்ப்பு  போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். திரைப்படங்களில் தான் இவர்கள் நல்லவர்கள் , நிஜ வாழ்க்கையில் இவர்களுடைய உண்மைத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டது

        மக்களிடம் உரிமையுள்ள அறிவாற்றல் இல்லாமை, உழைப்பின்றிக் கிடைக்கும் இலவசங்கள் மீது கொண்டுள்ள அளவற்ற ஆசை ,தவறான  வழிகளில் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்களின் செல்வாக்கின் ஆதரவுடன் குறுகிய காலத்தில் பொருள் குவித்துவிடவேண்டும் என்ற உணர்வு -போன்ற பலவீனங்களே இவர்களுக்கு நிரந்தர ஆதரவாக இருக்கின்றது. நீண்ட காலம் நடிப்புத் துறையில் கோலோச்சிவிட்டு  குறுகிய காலத்தில்  சிறந்த அரசியல்வாதியாக வரவே முடியாது. சாணக்கியனாக  நடிக்கலாம் ஆனால் சாணக்கியனாக முடியாது. தலைமைக்கு நடிப்புத் திறன் மட்டுமே போதுமானது என்றால் இவர்களுடைய  நடிப்புத் திறன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு  அடிப்படியான  என்ன முன்னேற்றத்தை வழங்கிவிடும். பெரும்பாலானோர் எதிர்காலத்தில் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவதில்லை. கடத்தகாலத்தில் நடந்த முன்னேற்றமின்மையைக் குறிப்பிட்டு குற்றம்சாட்டுகின்றார்கள். அரசியலுக்கு வருபவர்களுக்கு அரசியல் அறிவு மிகவும் அவசியம். அப்பொழுதுதான் கோடிக்கணக்கான மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். மனித நேயமும் சேவை மனப்பான்மையும்  கூடுதலாக இருக்கவேண்டும் . அப்பொழுதுதான் வேற்றுமையின்றி எல்லோருக்கும் உதவி செய்யமுடியும் .பொருளாதாரம் பற்றிய தெளிவு இருக்கவேண்டும் .அப்பொழுதுதான் நாட்டின் வளர்ச்சியை  மக்களைக் வரிவிதிப்பால் கொடுமைப்படுத்தாமல் மேம்படுத்த முடியும். சட்டம்  தெரிந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் அதிகாரம் கண்ணை மறைப்பதில்லை 

No comments:

Post a Comment