இந்திய அரசியல்வாதிகள் அரசின் நிதியை மக்களுக்காகச் செலவழித்தது போல கணக்குக் காட்டிவிட்டு. சட்டத்தின் கையில் சிக்காமல் நிதியை தனதாக்கிக் கொண்டுவிடுகின்றார்கள் . இதை ஒத்த எண்ணம் கொண்டவர்களாக இணைந்து கூட்டு முயற்சியால் செய்வதால் இரகசியம் தெரிவதில்லை . ஒருவேளை தெரிந்தால் அவர்களைப் பயமுறுத்தி தன்னக்கட்டி விடுகின்றார்கள் .அல்லது பணம் கொடுத்து நிறுத்திவிடுகின்றார்கள் . அதுவும் முடியாவிட்டால் கூட்டு முயற்சியில் பங்காளியாக இணைத்துக்கொள்கின்றார்கள் .இது காலங்கடந்து கூட கசிந்து வெளியே தெரிவதில்லை . அரசின் நிதி இப்படியே காணாமல் போய்க்கொண்டிருந்தால் மக்கள் எவ்வளவு உழைத்தாலும் முன்னேற்றம் காணவே முடியாது .இதைத் தடுப்பததற்கு ஒரே ஒரு கடுமையான சட்டம் போதும் . சட்டம் எழுத்து வடிவில் இருந்தால் மட்டும் போதாது செயல்வடிவில் இருக்கவேண்டும் . செய்யல்படுத்துபவர் பணத்திற்கு அடிமையாகிவிடும் போது சட்டம் ஒரு கேலிப்பொருளாகிவிடுகின்றது . இது பற்றி சட்டம் இயற்றுபவர்கள் தான் சிந்திக்கவேண்டும்
No comments:
Post a Comment