இந்த வேலையில் சேர்வதற்கு கல்வியறிவு தேவையில்லை . பொய் சொல்லத் தெரிந்தால் போதும் தனித் திறமை என்று எதுவும் தேவையில்லை .பிறருடைய பலவீனமே முன்னேறுவதற்கு மூலதனம் .. எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்றும் கில்லாடித்தனம் இருந்தால் சீக்கிரம் உயர் பதவியை ப் பெறலாம் . மக்கள் நம்பிவிட்டால் உங்கள் காட்டில் மழைதான். கில்லாடித்தனத்தோடு அதிகாரமும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் . என்ன குற்றம் செய்தாலும் தண்டனை கிடையாது . அரசு இயந்திரமே ஒத்துழைப்பு வழங்கும்.
அது என்ன வேலை ? நாடாளும் உரிமையைப் பெறுவதுதான்
. அந்தக்காலத்தில் பொல்லாத அரசனுக்கு க் கூட கிடைக்காத உல்லாச வாழ்க்கை ஒரு சாதாரண அரசியல் வாதிக்கு இலவசமாய்க் கிடைத்துவிடுகிறது . ஜனநாயகம் தவறான வழியில் பயணிக்கின்றது
No comments:
Post a Comment