Wednesday, October 29, 2025

 அரசியல்வாதிகள் தரும் இலவசகங்களுக்காக சொந்த உழைப்பை மறந்து இழந்து வாழும் மக்களை ப் பார்க்கும் போது,அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதைதான் என் நினைவைத் தொடுகின்றது .மக்கள் எல்லோரும் எப்போதும் உழைத்து வாழ்ந்தால் நாட்டை ஆள்வதற்கு ஒரு தலைவன் தேவைப்படுவதில்லை . நாட்டில் மிகுந்து வரும் ஏழைகள் ,பிச்சைக்காரர்கள் , வேலை இல்லாதவர்கள் , தீயவர்கள் ,குற்றவாளிகள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு ஒரே தீர்வு இருக்கின்றது. அதை ஆள்பவர்கள் தெரிவிக்க வோ செயல்படுத்தவோ மாட்டார்கள் . எல்லோரும் எபோதும் உழைத்து வாழ்வதுதான் அந்த மகத்தான தீர்வு.. அதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் .

Tuesday, October 28, 2025

 சும்மா அதை இலவசமாகத் தருவேன் ,இதை இலவசமாகத் தருவேன் என்று நம் அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றார்கள் . இது மக்களிடையே மேலும் மேலும் போலியான தலைவர்களையே  உருவாக்குகின்றது .தனக்குப் பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக  இப்படி போலி வாக்குறுதிகள் வழங்குபவர்கள் தங்கள் பொருளை ச் சிறிதும் இழக்க விரும்பாதவர்கள் . அதைக்கொடுப்பேன் ,இதைக்கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு ,பின்னர் கொடுத்துவிட்டதாக அவர்களே எடுத்துக்கொள்ளத்தான் இப்படிச் சொல்ல்கின்றார்கள் . இந்த இந்தியாவை உங்கள் எல்லோருக்கும் பட்டா போட்டுக்கொடுப்பேன் ,என்னையே உங்கள் தலைவராக த் தேர்ந்தெடுங்கள் என்று நம் அரசியல்வாதிகள் சொல்லாமல் விட்டார்களே என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான் 

Wednesday, October 15, 2025

 வெறும் அறிவுரை மூலம் திருத்தும் காலத்தை த் தவறவிட்டோம் . தண்டித்து திருத்தும் காலத்தை தவறவிட்டோம் . போராடி வெற்றி பெரும் காலத்தை த் தவறவிட்டுவிட்டோம் , முயற்சிகள் அற்ற பேச்சு ஒரு காலத்திலும் பலன் தருவதில்லை இந்தியாவில் ஊழலை ஒழிக்கமுடியாது .ஒழிக்கவே முடியாது 

Wednesday, October 1, 2025

                                                                  இந்த வேலையில் சேர்வதற்கு கல்வியறிவு தேவையில்லை . பொய் சொல்லத் தெரிந்தால் போதும் தனித்  திறமை என்று எதுவும் தேவையில்லை .பிறருடைய பலவீனமே முன்னேறுவதற்கு மூலதனம் .. எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்றும் கில்லாடித்தனம் இருந்தால் சீக்கிரம் உயர் பதவியை ப் பெறலாம் . மக்கள் நம்பிவிட்டால் உங்கள் காட்டில் மழைதான். கில்லாடித்தனத்தோடு அதிகாரமும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் . என்ன குற்றம் செய்தாலும் தண்டனை கிடையாது . அரசு இயந்திரமே ஒத்துழைப்பு வழங்கும்.  

 அது என்ன வேலை ?   நாடாளும் உரிமையைப் பெறுவதுதான் 

. அந்தக்காலத்தில் பொல்லாத அரசனுக்கு க் கூட கிடைக்காத உல்லாச வாழ்க்கை ஒரு சாதாரண அரசியல் வாதிக்கு இலவசமாய்க் கிடைத்துவிடுகிறது . ஜனநாயகம் தவறான வழியில் பயணிக்கின்றது