சும்மா அதை இலவசமாகத் தருவேன் ,இதை இலவசமாகத் தருவேன் என்று நம் அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றார்கள் . இது மக்களிடையே மேலும் மேலும் போலியான தலைவர்களையே உருவாக்குகின்றது .தனக்குப் பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி போலி வாக்குறுதிகள் வழங்குபவர்கள் தங்கள் பொருளை ச் சிறிதும் இழக்க விரும்பாதவர்கள் . அதைக்கொடுப்பேன் ,இதைக்கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு ,பின்னர் கொடுத்துவிட்டதாக அவர்களே எடுத்துக்கொள்ளத்தான் இப்படிச் சொல்ல்கின்றார்கள் . இந்த இந்தியாவை உங்கள் எல்லோருக்கும் பட்டா போட்டுக்கொடுப்பேன் ,என்னையே உங்கள் தலைவராக த் தேர்ந்தெடுங்கள் என்று நம் அரசியல்வாதிகள் சொல்லாமல் விட்டார்களே என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்
No comments:
Post a Comment