தூங்காத கண்ணொன்று
ஆஸ்திரேலியாவின்
மௌனலிசா கலைக் கூடம் நடத்திய பன்னாட்டு அளவிலான ஓவியப் போட்டியில் சிங்கப்பூரின் நாஃபா ஓவியப் பள்ளி மாணவி ஜின் ஜிங் முதல்
பரிசு பெற்றார்.இவ்வாண்டுக்கான
மௌனலிசா விருதும்
2௦,௦௦௦ டாலரும் அவருக்கு ஆஸ்திரேலிய கலைத் துறை அமைச்சர் ஜியார்ஜ்
பிராண்டிஸ் அளித்தார். நிழல் படத்துடன் அன்றைய 'தி ஸ்ட்டெரைட் டைம்ஸ்' வெளிவந்தது
சிங்கப்பூரின் உற்சாகமான வரவேற்பு சாங்கி விமான நிலையம் இரண்டாம் முனையத்திலிருந்து வெளியேறிய ஜின் ஜிங்கின் சிந்தையைத் தீண்டவில்லை.அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் அவள் கண்கள் வினோதினிப் பாட்டியைத் தேடின. ஏமாந்திருக்க வேண்டும் என்பதை சட்டென வாடிய அவள் முகம் காட்டியது. டாக்சியைப் பிடித்து விரைந்து வீட்டிற்குப் புறப்பட்டாள் .
ஓய்வுபெற்ற மர வேலை ஆசாரி சென் சியான் செங் - ஜிங் லீ தம்பதியினரின் ஒரே மகள்தான் 23 வயதாகும் ஜிங் ஜின்.முடக்கு வாதத்தால் படுத்துக் கிடக்கும் ஜிங் லீ வாழ்நாள் நோயாளி, ஜிங் ஜின் ஒரு மாற்றுத் திறனாளி..பிறவியிலேயே அவளுக்கு ஒரு கண்பார்வையில்லை. பளிங்குக் கண் .
.உற்றுப் பார்த்ததால் தான் தெரியும். குடும்பச் சூழ்நிலை கருதி அவள் தன் பெற்றோரைவிட்டுச் செல்ல விரும்பவில்லை . அவளுக்கென்று விரிந்து கிடந்தது ஒரு மனம்.
வீட்டு வேலை செய்யவும்,தான் இல்லாத போது
வயதான பெற்றோருக்கு உதவியாக இருக்கவும் வினோதினியை பத்தாண்டுகளுக்கு
முன்னால் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு விட்டார்கள் சென் சியான் செங் குடும்பத்தினர்.பல வீடுகளில் வீட்டு வேலை செய்யும் வினோதினி ஒரு ஈழத் தமிழச்சி. அப்போது 50
வயதிருக்கும் .. வயதான அம்மாவையும், வேலை செய்யும் போது
இயந்திரத்தால் கைகளை இழந்த கணவனையும் காப்பாற்ற சிங்கப்பூருக்குப் பிழைக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஊருக்குப் போய்வர ஆகும் செலவைக்கூடத்
தவிர்த்து தன் குடும்பத்திற்கு அனுப்பி வந்தாள்.
‘கெடும் குடி கெடும்’ என்ற சொல்லுக்கு அவள் குடும்பமும் ஓர் உதாரணமானது. ஈழப் போரில் நடந்த இனப் படுகொலை அவள்
குடும்பத்தின் முகவரியை மயானத்தில் அடக்கம் செய்து.ஆனந்தக் கூத்தாடியது. ஆதரவில்லாத சொந்த
ஊருக்குச் செல்ல மனமில்லாத வினோதினிப்
பாட்டி
சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டாள். வாடைக்குத் தங்கிய வினோதினிப் பாட்டிக்கு
இப்பொழுது ஜிங் ஜின்னும் அவளது வயதான பெற்றோரும் தான் உறவு.. மனித நேயம் மீட்டுத் தந்த புதிய உறவுகளினால் வினோதினி கடந்த காலச் சோகங்களை
மறந்து போயிருந்தாள்
ஜிங் ஜின்னிடம் ஓவியம் தீட்டும் திறமை
இருந்தது
அதனால் அவளை சென் சியான் செங் நாஃபா ஓவியப்
பள்ளியின் சேரக் கட்டாயப்படுத்தினார் .அப்பாவின் கட்டாயத்திற்காக
சேர்ந்தவளுக்கு அது மனதிற்கு பிடித்திருந்தது வரைவதிலும்,வண்ணந்தீட்டுவதிலும்
திறமையை வளர்த்துக் கொண்டாள். கண்ணால் கண்ட இயற்கைக் காட்சியை உயிரோவியமாக வரைவதில் அவள் தேர்ச்சி
பெற்றிருந்தாள். அவளது திறமையைக் கண்டு வியந்த பள்ளி அவளுக்கு
தற்காலிய ஆசிரியர் பதவியும் கொடுத்திருந்தது
உலக அளவிலான ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள நாஃபா ஓவியப் பள்ளி அவளைத் தேர்வு
செய்த போது முதலில் அவள் கொஞ்சம் தங்கினாள். முதல்வரின் அன்பிற்கும் அப்பாவின்
வேண்டுகோளுக்கும் இணங்கி அந்த வாய்ப்பை இறுதியில் ஏற்றுக்கொண்டாள். ஆனால் வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சி
அவளுக்கு நீடித்திருக்கவில்லை.
வாழ்க்கையில் கண்ணாம்பூச்சி அவள் கண்ணில் மீண்டும் விளையாடியது.போட்டிக்கு இன்னும் இரண்டு மாதமே இருக்கும் போது
தூரிகை குத்தி அவள் கண்பார்வை பாதிக்கப்பட்டது.
பார்வையை மீட்டுப் பெற கண் மாற்றுச்
சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்
சொன்ன போது அவள் எண்ணத்தில் பேரிடி சத்தமில்லாமல் விழுந்தது. போட்டியில் இனி கலந்து கொள்ள முடியாது என்று சோர்ந்து போய் தான் சோகத்தை வினோதினிப்
பாட்டியிடம் இறக்கி வைக்க முயன்றாள்.
இரவு 10 மணி. எங்கு நோக்கினும் ஒளி வெள்ளம்.பகலை விட இரவில் தான் சிங்கப்பூர் அழகு.திரும்பத் திரும்பப் பார்த்தாலும்
தெவிட்டாத அழகு-இது பட்டிமன்றத் தீர்ப்பு.
உண்மைதான்.உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்து அந்த அழகை அள்ளிப்
பருகிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து அதை உறுதிப்படுத்திக்
கொண்டிருந்தனர்.ஆனால் குடியிருப்புகளுக்கு
நடுவில் இருக்கும் விளையாட்டுத் திடலில் ஒரு பெஞ்சில் அமர்ந்த வினோதினி மட்டும் அந்த அழகை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் உள்ளத்தில் ஓர் ஊமைப் படம் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. அவள் ஒரு முடிவுக்கு வந்தவள் போல எழுந்து தன் அறைக்குத் திரும்பினாள்.
பாலைவனச் சோலை போல ஈழத்தில்
குடும்பத்தை இழந்தவளுக்கு சிங்கையில் ஒரு குடும்ப உறவு கிடைத்தது.
அந்த மகிழ்ச்சியே அவளுக்கு அரிய பொருளாக
இருந்தது. ஜிங் ஜின்னை தான் பெறாத மகள் என்றே
கருதிப் பாசத்துடன் பழகி வந்தாள். அதனால் கண்ணிழந்து வாடும் ஜிங் ஜின்னுக்கு தன்னுடைய ஒரு கண்ணை அளிக்க முடிவு செய்தாள். கட்டாயப்படுத்த ஜிங் ஜின்னும் அந்த
முடிவுக்கு ஒப்புக் கொண்டாள்.
நாடுகள் பலவானாலும்,
நிறங்கள் பலவானாலும் நல்லவேளை இரத்தம் நாலு வகைக்குள் அடங்கி விடுகின்றது.
ஒரே வகை இரத்தம் என்பதால் கண் அறுவைச்
சிகிச்சை செய்யத் தடையில்லை என்று மருத்துவர் கூறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
செலவை
நாஃபா மேற்கொண்டதால் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக
முடிக்க முடிந்தது. அடுத்த சில நாட்களில் இருவரும் வீடு திரும்பினார்கள். அடுத்த சில வாரங்களில் ஜிங்
ஜின்னுக்கு பார்வையும் சரியானது.தவிர்க்க முடியாததால்
ஓவியப் போட்டியில் மட்டும் கலந்து கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதித்து கவனமாக இருக்க
மறுத்துவர் ஆலோசனையும் கூறியிருந்தார்.
போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்த்திரேலியா புறப்பட்டுச் செல்லும் முன்பு
பெற்றோரிடமும் விநோதினிப் பாட்டியிடமும் விடை பெற்றுக் கொண்டாள். போட்டி முடிந்தவுடன் அடுத்த வாரம் உடன் திரும்பி வருவதாகக் கூறி கூடியிருந்த எல்லோரிடமும் பிரியாவிடை
பெற்றுக் கொண்டாள். வினோதினியின் மூடப்படாத கண்ணிலிருந்து நீர்த் துளி தோன்ற ஜிங் ஜின் மனத்தில்
ஏதோ இனம் புரியாத கலக்கம் வழிந்தது. வினோதினியின் நெஞ்சைத் தொட்டுப் பார்த்த ஜிங் ஜின் பதறிப் போனாள்.உஷ்ணம் நூறு டிகிரிக்கும் மேல் இருந்தது. மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கிச் சாப்பிடுமாறு பல முறை சொல்லி விட்டு
சாங்கி விமான நிலையம் புறப்பட்டாள்.அந்த ஒரு வாரத்தில் எவ்வளவோ எதிர்பாராத மாற்றங்கள்.உள்ளுக்குள் புரையோடிப் போயிருந்த தொற்று நோய்யைக் கவனிக்காமல் விட்டதால் வினோதினியின் உடல் நிலை மிகவும் மோசமானது..ஜிங் ஜின் முதல் பரிசை வென்று வீடு திரும்புவதற்குள் வினோதினிப் பாட்டி கண்ணை மூடிக் கொண்டு காலமானாள்.வெற்றிப் பரிசை விநோதினியின் அந்தக் கண் மகிழ்ச்சியுடன் பார்த்தது . ஜிங் ஜின் னின்
கண்ணிலிருந்து வழிந்த நீர் சூடாக இருந்தது.. எல்லோரும் அதை ஆனந்தக் கண்ணீர் என்றே
நினைத்தனர்