Monday, February 17, 2014

KAVITHAI

சமுதாயத்தின்  வாழ்வாதாரம்  

சமுதாயத்தின்  வாழ்வாதாரம்  


பூமியைத் தோண்டி  
பொன்னும் பொருளும்
பொறுக்கி  எடுத்து   
கடிய  நிலந்திருத்தி 
விடிய நீர்பாய்ச்சி 
விளைபொருள்  பெருக்கி
வாழ்வோருக்கு உழைப்பே
வாழ்வாதாரம்
வசிகர   இலக்கின்
பொருளாதாரம் 
  
ஆண்டுக் கணக்கில்
ஆழத் தோண்டி 
துளித் துளியாய்
சேர்த்து சேமித்து
ஆங்காங்கே அடுக்கப்பட்டு
அழகாய்த் தூங்கும்
தங்கக் கட்டிகளா 
தாங்கிப் பிடிப்பது 
உலகின் ஒட்டுமொத்த 
பொருளாதாரத்தை?

உனக்குள் இருக்குதொரு 
தங்கச் சுரங்கம் 
கேட்பாரற்றுக் கிடக்குது
ந்தச் சுரங்கம் 
மண்ணைத் தோண்டி
மயங்கும் மனிதனே 
விண்ணைத் தாண்டி 
வியக்கும்  நீயுன்
மனதைத் தீண்டிப்
பார்க்க  மறந்தாயோ?


வெறும்  பொருளே
வாழ்க்கை ஆவதில்லை 
மெய்ப்பொருள்  உணரா 
மனித  வாழ்க்கை 
கருப்பொருள் இல்லா
கதை போல 
புறப்பொருள் தேடும்
மனிதனே  உனக்குள்
அகப்பொருள் நாடி
அறியவும் மறக்காதே

சிரிக்காத  தங்கக்கட்டிகள் 
சிறைக்கைதிகள்  போல
உறங்கிக் கிடக்கும் 
கனவுக் கன்னிகள்
உறவுக்கு உதவா 
உருவ  இளவரசிகள் 
மாவீரன்போல மனம்
சிறகடித்துப் பறக்கும்
உறங்கும் லகை
உசுப்புவிடும் த்தமன்

அன்பும் பொருளாதாரம் 
அறிவும் பொருளாதாரம் 
பொருள்  புறமென்றால்
அவையிரண்டும் அகமென்பர் 
அகலர  புறஞ்சிரிக்கும்
புறஞ்செழிக்க அகங்கொழிக்கும்
அன்பும் அறிவும் 
ஒருங்கிணைந்தால் அதுவே 
ழியாத சமுதாயத்தின் 
வளமிகு வாழ்வாதாரமாகும்

ஆக்கம் தரும் அறிவு 
அகப் பொருளாதாரமானது
ஏக்கம் தரும் அன்பு 
எப்படிப் பொருளாதாரமானது ?
அறிவறியா நாடுகள் 
வளமிழந்த திருவோடுகள்
அன்பைத்துறந்த நாடுகள்  
வம்பால்வளரா  நாடுகள் 
எடுத்துக்காட்டுகள் இருக்கு  
எண்ணிலா இவ்வுலகில் 

படித்தும் சரித்திரம்
பாடம் கற்கவில்லை 
அன்பின்றி வாழ்ந்தநாடுகள் 
எங்குமில்லை தோழா
அறிவு ஒருகண்ணென்றால் 
அன்பு மறு கண்ணாகும் 
இருகண் வேண்டாம்  
ஒரு கண் போதுமென்று
சொல்லத் துணிவார் 
யாருளர் தோழா


No comments:

Post a Comment