Saturday, February 15, 2014

Eluthaatha Kaditham

    ஆட்டோவில் மீட்டர் பொருத்தவில்லை என்றால்,காவல் துறை நடவடிக்கை எடுக்கின்றது,அனுமதி இன்றி மணல் அள்ளினால் தாசில்தார் நடவடிக்கை எடுக்கின்றார்.வருமான வரி ஏய்ப்புச் செய்தால் வருமான வரித் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றார்கள்,மக்கள் தவறு செய்யாமல் இருக்க அரசியல்வாதிகள் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என்றாலும் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு இருக்கும் எல்லா நடவடிக்கைகளையும் வலுவிழந்து போகச் செய்து விடுகின்றார்கள். அதற்காக அதிகாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றார்கள் கண்காணிப்புப் பணிகளும் தீவிரமாகவும்,பிசகின்றியும் செய்யப்படுவதில்லை  அவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்.? எல்லா வளம் மிருந்தும் இந்தியா முன்னேறவில்லை என்றால் அதற்கு அரசியல்வாதிகளின் இந்த மனப் போக்கே காரணம்.அரசியல்வாதிகள் உண்மையான அரசியல்வாதிகளாக இருப்பார்களேயானால் இந்தியா 2020 என்ன,அதற்கு முன்னால் கூட ஒரு வல்லாரசாக உருவாகும். அரசியல்வாதிகள் பல கட்சிகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஆதாயத்திற்காகச் சண்டை போடுகின்றார்கள்..பொறுப்பின்றி திட்டமிடுவதும், திட்டச் செலவு செய்வதும் அவர்களுக்கு வாடிக்கையாகி வருகின்றது.அரசியல்வாதிகள், அதிகாரிகள்,மக்கள் என யாரிடமும் மன எழுச்சியோ அல்லது மாற்றமோ ஏற்படவில்லை.அதிகாரிகள் பொது மக்களுக்காகப் பணிபுரிவதை விட அரசியல்வாதிகளின் அடிமைகளாக வேலை செய்கின்றார்கள். அரசியல்வாதிகள் இந்தியாவின் முதலாளிகள் போலவும், அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ் வேலைசெய்வது போலவும்,ஆன நிலை மேலும் மேலும் வலுவடைந்து வருவதால் இந்தியா உண்மையான வளர்ச்சியை ஒருகாலத்திலும் எட்டாது என்பதே நிதர்சனமான உண்மை.                                                                                                                     

No comments:

Post a Comment