Friday, May 2, 2014

Eluthatha kaditham

எழுதாத கடிதம்
சென்னை சென்ட்ரலில் ஹௌஹாத்தி விரைவு ரயில் வண்டியில் குண்டு வெடித்து சுவாதி என்ற பெண் மரணம்,பலர் படு காயம்.ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.இழப்பீட்டுத் தொகை ,மற்றும் நிவாரண உதவிகளைச் செய்ய ஆணையிட்டார்கள். 
தாங்கள் மக்களுக்காக சேவை செய்கின்றோம்  என்ற போக்கை  எப்போதும் போல வெளிக் காட்டிக் கொள்கின்றார்கள் அவ்வளவுதான். எதிர்க்கட்சியினர் மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மையைச் சுட்டிக் காட்டி அரசாங்கத்தின் பொறுப்பின்மையை எடுத்துக் கூறுகின்றார்கள் .குண்டு வெடிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியினர் ஆட்சி புரியும் போது தான்  நடக்கின்றது என்று கூறமுடியாது. எனவே இந்த அராசாங்கம் தவறிவிட்டது என்று கூறும் போது இதே நிலை அரசாங்கம் மாறும் போதும் நிகழலாம் அப்போது அதே பொறுப்பின்மைக்கு இவர்களும் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.
விபரீதம் நடந்த பிறகு பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டது என்று சொல்கின்றார்கள். விபரீதம் நடப்பதற்கு முன்பே  பலமான ,போதுமான பாதுகாப்பு இருக்கவேண்டும் .அது நம்முடைய அமைப்பில் இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பணியில் செயல்படும் நிலையில்  அராசாங்கம் அவர்களை விட்டுவைக்கவில்லை  மக்களுக்கான பாதுகாப்பு அமைப்புகள் மக்களுக்காக மட்டுமே பணியாற்றவேண்டும். ஆட்சியாளர்களின் பாதுகாப்புக்கு ஒரு தனி அமைப்பிருக்கலாம் ஆனால் பாதுகாப்பு அமைப்பே ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப செயல்படக்கூடாது.

எல்லா அமைப்புகளிலும் இந்தக் கோளாறு இருக்கின்றது. இதற்குக் காரணம் அவர்களைக் கட்டுப் படுத்தும் பொறுப்புள்ளவர்கள் சும்மா இருப்பதும். அவர்களை பிற வேலைகளுக்குப் பயன் படுத்திக் கொள்வதுதான்.

No comments:

Post a Comment