Saturday, May 3, 2014

Eluthatha kaditham

எழுதாத கடிதம்
எந்த நிர்வாகத்திலும் கண்காணிப்பு இல்லாததால் இந்திய மக்களிடையே  மிகச் சாதாரணமா விதி மீறிச் செயல் படும் எண்ணம் மேலோங்கி வருகின்றது.சுய கட்டுப்பாட்டை படிப்படியா இழந்து வருகின்றார்கள். கண்காணிப்பு இல்லாமை தீய செயல்களைச் செய்யத் துணிவைத் தரும்.  கண்காணிப்பாளர்களுக்கு கண்காணிப்பு இல்லாததால். இத் துணிவு இயல்பாகவே வந்து விடுகின்றது. சொல்லப்போனால் இந்த சைகளினாலேயே  கண்காணிப்பாளர் பதவிக்குப் போட்டி போடுகின்றார்கள் ஒருவரைக் கண்காணிக்க இருக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் போது அவர் குற்றச் செயல்கள் செய்யும் அளவு அதிகமாகவே இருக்கின்றது. பொது மக்களுக்கான கண்காணிப்பு அமைப்புகளை அரசாங்கம் சுய லாபத்திற்காக பலவீனப்படுத்தி விடும் போது அவை சரியாகச் செயல்படுவதில்லை.தன் அதிகாரத்தினாலும்,சரியாகச் செயல் படாத கண்காணிப்புப் அமைப்புககளினாலும் எவ்வித இடையூறுமின்றி எளிதாகத் தீய செயல்களைச் செய்யலாம் என்று நினைக்கின்றார்கள்.யாருக்கும் தெரியாமல் தவறு செய்யும் போது அதைத் தொடர்ந்து செய்ய
முடிவதோடு எதிர்ப்பின்றியும் செய்து முடிக்க முடிகின்றது. இப் போக்கு அதிகாரத்தில் இருக்கும் அரசியல் லைவர்களிடமிருந்து தான் தொடங்கியது. அதன் பரிணாம வளர்ச்சியில் உயர் அதிகாரிகளையும் அடுத்து அரசு ஊழியர்களையும் ,வர்த்தகர்களையும் ,இப்போது சாதாரண குடிமக்களையும் தொற்றிக் கொண்டது. .இது பரிணாம வளர்ச்சிப் படிகளில் நிலை பெற்று வருவதால் புதிய தலைமுறையினரின் உள்ளார்ந்த பண்புகளில் திருத்த முடியாத அளவுக்கு பெரிய
மாற்றங்களை உருவாகியுள்ளது.
கண்காணிப்புப் பணியில் இருந்து கடமையாற்றி சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டிய
பொறுப்புள்ளவர்கள் தம் பணியில் காட்டாத அக்கறையால் சமுதாயம் வெகுவாகச் சீழிந்து வருகின்றது. . ரேஷன் கடைக்குப் போனா அங்கே அளக்கப்படுவதுதான் அளவு. என்றைக்கு வேண்டுமானாலும் கடையைத் திறப்பார்கள் அல்லது மூடுவார்கள் .தங்கம்,வெள்ளி நகைகளில் எவ்வளவு செம்பு வேண்டுமாலும் கலப்பார்கள், சேதாரம் என்று தன் இஷ்டம் போல வைத்துக் கொள்வார்கள். பேருந்துக் கட்டணத்தை இஷ்டம் போல உயர்த்திக் கொள்வார்கள் பள்ளிக் கூடக் கட்டணத்தை விருப்பம் போல அதிகரிப்பார்கள் .கேட்பதற்கு யாரும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. விற்கப்படும் பொருளின் தரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக்  கொள்ளலாம்.விலையையும் விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளலாம்.மக்களிடம் எதிர்ப்பு பலமாகும் போது மட்டும் தற்காலியமாக சில நடவடிக்கைகள் வரும் போகும். விற்பனையில் ஏற்படும் சரிவு, போட்டி போன்ற காரணங்களினால் வியாபாரிகளாகவே விலையைக் குறைத்தால் தான் உண்டு.மற்றபடி மக்களை ஏமாற்றும் போக்கில் எந்தக் குறுக்கீடும் இருப்பதில்லை.

இந்தியாவை அழிக்க யாரும் வெளியில் இல்லை. இந்தியா இந்திய மக்களாலேயே அழியும்.  

No comments:

Post a Comment