ஆட்சியாளர்கள் எங்கே தவறு செய்கின்றார்கள் ?
நீதிபதிகள், துணை வேந்தர்கள் அரசு உயர் அதிகாரிகள், ,அரசு அலுவலர்கள் ,என அனைத்துப்
பணி நியமனத்திற்கும் ஒரு தொகை வாங்கிக்கொள்கின்றார்கள் அதன் மூலம் அவர்கள் எல்லோரையும் நிரந்தரமான அடிமைகளாக்கி
பயன்படுத்திக் கொள்கின் றார்கள். பணம் கொடுத்து
பதவி வாங்கியதால் பதவியால் பணம் சம்பாதிக்கும் எண்ணமே அவர்களிடம் இருப்பதால் ஊழல் வாதிகளாகவே
நிலை மாறாமல் இருக்கின்றார்கள்..முதன்மைக் கல்விக் கூடங்களில் மருத்துவப்படிப்பிற்கும் ,பொறியியல் படிப்பிற்கும் ஒரு தொகை வாங்கிக் கொள்கின்றார்கள் . இதனால் தகுதியான
மாணவர்கள் கல்வி கற்று திறமையை நாட்டுக்காக வெளிப்படுத்துவதில்லை . மக்களுக்கு வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொடுக்கத்
தவறியதால் அவர்கள் என்றைக்கும் இலவசங்களைத் தேடி அலைகின்றார்கள். வாழ்வாதாரம் இல்லாத
ஏழைகள் என்றைக்கும் இவர்கள் தரும் இல்லவசங்களுக்காக காத்துக் கிடப்பார்கள். மக்கள்
நலத்ததிட்டங்களை வகுத்துக்கொண்டு அதன் விவரங்களை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதில்லை
. எப்போதும் திட்டங்களுக்காக இவ்வளவு செலவு செய்துவிட்டோம் என்று மட்டும் செலவு க்கணக்கை மட்டும்
விளம்பரப்படுத்துவார்கள். தேவையற்ற
நிர்வாகச் செலவுகளை தவிர்துக்கொள்ளாமல் மக்களின் மீது சுமையை ஏற்றிவிடுகின்றார்கள் நாட்டு நலமும் ,மக்கள் நலமும் எண்ணத்தில் இல்லாமல்
தலைவர்களாக இருப்பதால் நாட்டின் முன்னேற்றம் எப்போதும் பின்னல் வருபவர்களால் விமர்சிக்கப்படுகிறது