Tuesday, April 23, 2024

கிருத்துவர்கள் வந்தபிறகுதான் இந்தியாவில் கல்வி வந்தது என்று ஒரு சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றார்க.ள். இது  முட்டாள்தனமான கருத்து . மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி இலக்கியங்கள் ,மொழியின் வளத்தைக் காட்டுகின்றது. கல்வியும்  கற்றவர்களும் இல்லாமல் இலக்கியங்கள் மலர்ந்திருக்கமுடியாது. உலகில் தமிழைத் தவிர்த்த எந்த மொழியிலும் இவ்வளவு இலக்கியங்கள் இல்லை. திருக்குறள் , பகவத் கீதை, ,வேதங்கள் போல இன்றைக்கும் பிற மொழிகளில் இல்லை .மொழிபெயர்ப்பு மட்டுமே உண்டு. தவிர மக்களிடம் கைத்தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்று இருந்தது   சிற்பங்கள், மர வேலைப்பாடுகள், மட்பாண்டங்கள் . துணி நெய்தல், இயந்திரங்களின்றி உழவுத் தொழிலில் நுட்பம் ,கட்டடக்கலை,வாழ்வியல் ஒழுக்கங்கள்,மூலிகை மருத்துவம், யோகா உடற்பயிற்சி போன்றவற்றை யெல்லாம் கற்றுக்கொள்ள கிருத்துவர்கள் மட்டுமின்றி ,சீனர்களும் ,அரேபியர்களும் , கூட வந்தார்கள்செழிப்பான வாழ்க்கையைப் பார்த்து இவர்கள் எல்லோரும் இங்கேயே தங்கிவிட்டார்கள். உண்மையில் இவர்கள் வந்து பிறகுதான் சமுதாய ஒழுக்கம் சீர்குலைய ஆரம்பித்தது. புகுந்த வீடு வந்தபிறகும் பிறந்த வீட்டுப் பெருமையை மட்டுமே பேசுகின்றார்கள் 

No comments:

Post a Comment