Saturday, April 13, 2024

ஆள்பவர்களின் இலக்கணங்கள்

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாயும் , இன்னும் நம் அரசியல்வாதிகள் தெடர்ந்து அவர்களுக்கு முன்னாள் ஆட்சிபுரிந்தவர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்கின்றார்கள் . இதன் மூலம் அவர்களுக்கு முன்னால்  ஆட்சி புரிந்தவர்களால் நாட்டுக்கு எந்த உருப்படியான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவின் தேவை ஒரு நல்ல நேர்மையான தலைவரே. 135 கோடி மக்களில் அப்படி ஒருவர் இல்லாமல் போனது நம் நாட்டின் தூரதிருஷ்டம்  தான் .நல்ல தலைவர் பிறக்காமல்  இல்லை. ஆனால் அவருடைய சுய சிந்தனைகளை கலைத்து விடுகின்றார்கள் . அதனால் அவர்கள் காலப்போக்கில் மனம் மாறி அவர்களைப்போலவே தீய சிந்தனைகளை மேற்கொண்டுவிடுகின்றார்கள். ஒரு நல்ல தலைவரின் இலக்கணம்.

உண்மையான நாட்டுப்பற்று . வாய்மொழியில் மட்டும் இல்லாமல் மனதிலும் பரிபூரணமாய் இருக்கவேண்டும் .

நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் கொண்டுள்ள  உண்மையான அக்கறை மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு இயந்திரத்தை கையாளும் உள்ளார்ந்த ஆர்வம்

தன்னைப்போலவே மற்றவர்களையும் மக்கள் நலப் பணியாற்றுவதற்கு வழிக்காட்டி ஒரு புதிய அரசியல் அணியை உருவாக்குதல்..

மக்கள் நலப்  பணியே தன் வாழ்நாள் பணி என்று ஏற்றுக்கொண்ட பிறகு பிற சுய தொழில்களில் ஈடுபடுதல் கூடாது . மக்கள் நலத் திட்டங்களை விளம்பரமின்றி செய்து முடிக்கவேண்டும் .    திட்டங்கள்  உண்மையிலேயே மக்களுக்குப் பயனளித்தால் அதை மக்கள் அரசுக்கு விளம்பரச் செலவு ஏதுமின்றி உலகமெங்கும் விளம்பரப்படுத்திவிடுவார்கள் .

ஆள்பவர்கள்  என்பதற்காக த் தேவையில்லாமல் அரசின் வருவாயைச் செலவு செய்யக் கூடாது . மக்களின் பணம் மக்களிடம் இருக்கும்போதுதான் நாடு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் ஆள்பவர்களை எப்போதும் குறை கூறுவதை விட்டுவிடவேண்டும் . ஆட்சியில் அமரத் தேவையானது மற்றவர் களின் குறைகள் இல்லை. ஆட்சியாளர்களின் எண்ணத்தில் இருக்கும் நாட்டு நலத் திட்டங்களே. . திட்டங்கள் என்பது வெறும் செலவு செய்வது மட்டுமில்லை  . அதற்கு காலத்தால் அழியாத திடமான உருவமும் இருக்கவேண்டும்,


1 comment: