Tuesday, December 30, 2025

 விடியல் பேருந்து , பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000  உரிமைத் தொகை  என தமிழக அரசு இலவசங்களைத் தர உதவியாக வரியை தவறாமல் செலுத்தும் நன்மக்களுக்கு புத்தாண்டு ழ்த்தாக   தமிழக மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள் . 

Sunday, December 28, 2025

 ஆளும்  அரசியல்வாதிகள் அதிகாரம் தரும் தைரியத்தில் மறைவொழுக்க நடவடிக்கைகளில்  மிகுந்த நாட்டம் கொண்டுள்ளார்கள் . மக்களின் நலம் காப்போம் என்ற உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றார்கள். ஆள்பவர்கள் ஊழல் புரிந்தால் அலுவலர்களும் அதையே செய்வார்கள். எல்லோரும் அப்படியே இருந்தால் திருட்டுத் தொழிலே தேசியத் தொழிலாகிவிடும் ஆபத்து இருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நான் என்பது நாம்தான் . அரசியல்வாதிகள் திருத்தினால் அனைத்தும் சரியாகிவிடும் என்றே நான் நினைக்கின்றேன் . திருந்தினால்தான் திருத்தமுடியும் , திருத்த முடியவில்லை என்றால் திருந்தவில்லை என்றே அர்த்தம் .

Thursday, December 25, 2025

     நாம் நம்முடைய திறமையைப் பயன்படுத்திக்கொள்ள தெரிந்து வைத்திருந்தால் நாமே முதலாளி இல்லாவிட்டால் நாம் தொழிலாகத்தான் இருக்க நேரிடும். நம்முடைய திறமையை மற்றவர்கள் தெரிந்து கொண்டு பயனீட்ட முயலும் போது அவர்கள் முதலாளியாகி விடுகின்றார்கள். இந்தியர்கள் பெரும் பாலும் தொழிலாளியாகவும் அமெரிக்கர்கள் முதலாளியாகவும் ஏன் இருக்கின்றார்கள் என்பதற்கான காரணத்தை இது உணர்த்துகின்றது. 

அரசியல்வாதிகளின் முதன்மைப்  பணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில்லை. நாட்டின் வளர்ச்சியை மக்கள் மூலம் மேம்படுத்துவதே ஆகும். நாட்டு மக்கள் அவரவர் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கும் போது அவர்கள் நிச்சியமாக அவர்களுடைய திறமைகளை அறிந்துகொண்டு முதலாளியாகி விடுவார்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாக இருக்க வேண்டாம். முதலாளிகளாக்கி விடுங்கள். இந்த நாடு உங்கள் உதவியின்றித் தானாகவே முன்னேறிவிடும் உங்களையும் இணைத்துக்கொண்டு .                                    


Wednesday, December 24, 2025

 கமிஷன் கொடுத்து தேர்தலில் நிக்க சீட் வாங்கி ,                                                                       கமிஷன் கொடுத்து  ஓட் வாங்கி ,                                                                                                கமிஷன் கொடுத்து பதவி வாங்கி,  மிஷன் கொடுத்து லஞ்சம் வாங்கி  எல்லாம் கமிஷன் எங்கும் கமிஷன், நாம் தான் இன்னமும் அரசியல்வாதிகள் 

நமக்காக சேவை செய்கின்றார்கள் என்று அழுத்தமாக நம்பிக்கொண்டிருக்கின்றோம்  

 அரசன் முதல் அடித்தட்டு மக்கள் வரை கொடுக்கப்பட்ட பணியை பணிக்காகச் செய்வதில்லை . அதனுள் ஒரு மறைபொருளை மறைத்து வைப்பதை பழக்கமாக்கி வளர்த்து வருகின்றார்கள். இதனால் பணியின் பயன்பாடு மாறுபடுகின்றது . பணியின்றி பலனை மட்டும் அனுபவிக்கும் போக்கு நாட்டை சீரழித்து விடும் . இதை நாட்டில் எஞ்சியிருக்கும் உண்மையான  நேர்மையான  தலைவர்களும் ,நீதிபதிகளும் உணர்ந்து தகுந்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்  

Tuesday, December 23, 2025

         கடவுள் மக்களைத்  தண்டிக்கின்றபோது கெட்டவர்களை மட்டும் அழிப்பதில்லை . கெட்டவர்களோடு சில நல்லவர்களையும் சேர்த்தே அழிக்கின்றார். பெரும்பாலான நல்லவர்கள் கெட்டவர்களைத்  திருத்துவதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது காரணமாக இருக்கலாம்  

Monday, December 22, 2025

   அதிகாரத்தில் உள்ளவர்கள் திறமையானவர்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்குள் மட்டுமே  தேடுகிறார்கள் .அதனால் தகுதியும் திறமையும் உள்ள உண்மையானவர்கள் தாய்நாட்டிற்குப் பயன்படாமல்  

போகும் வாய்ப்பு ஏற்படுகின்றது . நாட்டின் வளம் வீணாகும் வழிகளில் இது முதன்மையானதாகும் 






Friday, December 5, 2025

 குற்றம் செய்வார்களோ என்ற எண்ணத்தில் மக்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் பல குற்றங்களைச் செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கண்டுகொள்வதேயில்லை