நாம் நம்முடைய திறமையைப் பயன்படுத்திக்கொள்ள தெரிந்து வைத்திருந்தால் நாமே முதலாளி இல்லாவிட்டால் நாம் தொழிலாகத்தான் இருக்க நேரிடும். நம்முடைய திறமையை மற்றவர்கள் தெரிந்து கொண்டு பயனீட்ட முயலும் போது அவர்கள் முதலாளியாகி விடுகின்றார்கள். இந்தியர்கள் பெரும் பாலும் தொழிலாளியாகவும் அமெரிக்கர்கள் முதலாளியாகவும் ஏன் இருக்கின்றார்கள் என்பதற்கான காரணத்தை இது உணர்த்துகின்றது.
அரசியல்வாதிகளின் முதன்மைப் பணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில்லை. நாட்டின் வளர்ச்சியை மக்கள் மூலம் மேம்படுத்துவதே ஆகும். நாட்டு மக்கள் அவரவர் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கும் போது அவர்கள் நிச்சியமாக அவர்களுடைய திறமைகளை அறிந்துகொண்டு முதலாளியாகி விடுவார்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாக இருக்க வேண்டாம். முதலாளிகளாக்கி விடுங்கள். இந்த நாடு உங்கள் உதவியின்றித் தானாகவே முன்னேறிவிடும் உங்களையும் இணைத்துக்கொண்டு .
No comments:
Post a Comment