Friday, October 9, 2026

   இந்தியவில்  அடிக்கடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து நாடு குறிப்பிடும் படி முன்னேற்றம் காணவில்லை .முன்னேற்றம் என்பது பீற்றிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் வாய் வார்த்தைகளில் மட்டுமே .மாற்றம் ஒன்று தான் இன்றைக்கும்  மாறாமல் நடக்கின்றது என்று சொல்வார்கள். அந்த மாற்றம் அரசியல் மாற்றங்களில் எப்படி தடுக்கப்படுகிகின்றது?  

     ஒரு சமயம் அடிப்படைக்காரணமின்றி ஒரு கட்சித் தலைவர் மீது ஏற்படும் நம்பிக்கை , அபிமானம் ,விருப்பம் எல்லாம்  மற்றொரு சமயம் அது எப்படி வந்ததோ அது போலவே விலகிச்சென்றுவிடும் . .நம் அரசியலில் யாரும்நிலைத்து  நிரந்தரமாக இல்லாமற் போனதற்கு  இதுவும் ஒரு கரணம். 

      வேஷம் போட்டு நடிப்பவர்கள் நடிகர்கள் . வேஷம் போடாமலேயே நடிப்பவர்கள் அரசியல்வாதிகள். இவர்களுள் மக்கள் தேடும் உண்மையானவர்கள் யாருமில்லை..இந்த இருவரை மட்டுமே மக்கள் நம்பும் வரை  சமுதாய முன்னேற்றம் என்பது என்றைக்கும் ஒரு எதிர்காலக் கனவுதான் .

No comments:

Post a Comment