Saturday, July 17, 2010

creative thoughts

வண்ண வண்ண எண்ணங்கள் -௨


1 .எண்ண எண்ண வண்ணகள்

எல்லா அறிவியல் புதிர்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்க முடிந்தாலும் முடியலாம் .

ஆனால் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மட்டும் முழுமையான விடையே காணமுடிவதில்லை

ஏனோ?

அறிவியல் புதிர்களும் கேள்விகளும் நாம் அறிந்தவை. அறிந்துகொள்ள ஒருவர் மாற்றி மற்றொருவரென

வழி தேடிக்கொண்டே இருப்பதால் இன்றில்லாவிட்டாலும் இன்னொருநாள் அதற்கு சரியான விடை கிடைத்து

விடுகின்றது. ஆனால் வாழ்க்கைப் பிரச்சினை

அப்படிஇல்லை.எல்லோரும் அறிந்ததுதான்.ஆனால் அறியாதது

போல் நடித்துக் கொண்டே இருக்கிறோம் .நாம் பிறருடைய பிரச்சினைகளுக்கு காரணமாக இல்லாதிருந்தால்

பாதிப் பிரச்சினைகளுக்கு த் தீர்வு கிடைத்த மாதிரித்தான் .





2.என்னய்யா அது ?

என் தலையே வெடித்து விடும் போலிருக்கு

அது என்னவென்று சொல்லுங்களேன்.



கலிலியோ ஊஞ்சலாடிக் கொண்டே உரைத்தது

ஆர்க்கிமிடிஸ் உடை அணிய மறக்கச் செய்தது

தூங்கிய நியூட்டனைத் தட்டி எழுப்பியது

கெப்ளர் சூரியனை வலம் வந்து வர்ணித்தது

ஜேம்ஸ்வாட் ஆவி உடன் பேசி அறிவித்தது

ஸ்டிபன்சன் அதே ஆவியை ஓடஓட ஓட்டியது

பாஸ்கல் அழுத்தத்தின் இறுக்கத்தில் திணறியது

ஹெர்ட்ஸ் அலைந்து துடித்து அறிந்தது

போல்ட்ஸ்மான் வெப்பத்தில் நொந்து சொன்னது

கூலும் மின்னதிர்ச்சியில் முனங்கியது

பிராங்கிளின் பட்டம் விளையாடி வென்றது

வேகத் தடை யிலும் ஓம் சாதித்தது

ஆம்பியர் பாய்ந்தோடி பரப்பியது

எடிசனுக்கு தண்ணிபட்டபாடு இது

கிரகம்பெல் பேசிப்பேசியே சாதித்தது

என்ன அது ?

அது = அறிவியல்



3 பேரண்ட ஒற்றுமை எங்கே போனது?

"காவேரி"



அன்றொருநாள் ...............

அண்ட முட்டை பொரிந்தது

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

அண்டங்கள் பிறந்தன

இருக்கும் வெளிக்குள்ளே

ஒற்றுமையாய் ஓடித்திரிந்தன

அதில் ...........

பால்வெளியும் ஒன்று

அடுத்த தலைமுறையாய்

அழகு விண்மீன்கள்

எங்கும் தெரிந்தன

கொத்துக் கொத்தாய்

ஒளிரும் .......

சூரியனும் அதிலொன்று

மூன்றாம் தலைமுறை

அருகே சுற்றும் கோள்கள்

அக்கா தங்கைக்குள்

நம் பூமியும்மொன்று

கண்ணிமைப் பொழுதில் அவள்

காட்டுவாள் ஆயிரம் விந்தைகள்

அவ்வளவும்

வியப்பூட்டும் வித்தைகள்

ஒவ்வொரு உயிர் பிறப்பும்

ஓசையின்றி உருவான அற்புதங்கள்

பூமிக்குள் நாடு

நாட்டுக்குள் நகரம்

நகரத்திலொரு வீதி

வீதியிலொரு வீடு

வீட்டுக்குளே குடும்பம்

குடும்பத்துக்குள்ளே நான்

நாமிலிருந்து வந்த நானுக்கு

உறவெல்லாம் பகையாகுமோ?

'ம்','ன்' ஆனால் அது

வேற்றுமை காட்டும் விகுதியகுமோ?

மரம் கிளைவிட்டால்

பகை கொண்டு முறியுமோ ?

கோடி கோடியாய் கூடியிருந்தாலும்

தேடியும் இல்லாத சலனம்

அலையும் மனதில் ஏன் வந்தது ?

விரியும் அண்டதிலில்லை வேற்றுமை

விலகும் நமக்குள் வேண்டும் ஒற்றுமை

மீண்டும் அந்த ஒற்றுமை .

No comments:

Post a Comment