Friday, July 23, 2010

eluthatha kadithangal-1

எழுதாத கடிதம்

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,

பலமுறை காப்பி குடிங்க,பரவாயில்லை.ஆனால் ' காப்பி குடிக்காமல் என்னால் இருக்கமுடியாது ' என்று மட்டும் சொல்லாதிங்க. அது போன்ற அடிமைத்தனமான எண்ணத்தை நமக்கு நாமே ஊக்குவித்துக்துக் கொள்ளக்கூடாது. காப்பிக்கு நீங்க என்ன அடிமையா? அடிமையின்னு சொல்லிக் கொள்வதில் உண்மையிலேயே பெருமைப் படுகின்றீர்களா?
ஒன்றுக்கு அடிமை ஆகிவிட்டால்,அதே பலவீனம் நம்மைப்
பலவற்றிற்கு அடிமைப்படுத்தி விடுகின்றது . இந்த அடிமைத்தனம் சற்று வித்தியாசமானது.சுதந்திரம் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு நம்மைநாமே அடிமைஆக்கிக்கொள்வதால்அதை நாம் சிறிது கூட
உணர்வதில்லை .சுதந்திரம் என்ற சட்டை போட்டுக்கொண்ட
அடிமை பெறும் மகிழ்ச்சியே நாம் அடையும் மகிழ்ச்சி. நாம் சுதந்திரமாகப் பிறந்தோம் சுதந்திரமாகவே இறக்கப் போகின்றோம் .அப்படி இருக்கையில் வாழும் போது மட்டும் ஏன் அடிமையாக நடிக்க வேண்டும்.இந்தப் பழக்கம் எப்படியெல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றது பாருங்கள்.டிவி யில் சீரியல் பார்க்காமல் தூங்க முடியாமல் பலர் ,சாராயம் போடாமல் இருக்க முடியாதுன்னு பலர், புகைப் பழக்கத்தை விடமுடியாமல் பலர், இவர் தான் என் அரசியல் தலைவர்,இவர்தான் எனக்குப் பிடித்த ஹிரோ, இவங்களுக்காக  உயிரையே கொடுப்பேன்னு பெற்ற தாயைக் கூட மறக்கத் துணியும் பலர் . காலப் போக்கில் இவர்கள் பல நல்ல குணங்களை இழந்து விடுகின்றர்கள் . செய்ய வேண்டிய காரியங்களுக்கான நேரத்தை வீணாய்க் கழித்து விடுகின்றார்கள்.அலட்சியப் போக்கு,மூர்க்க குணம் ,வெட்டிப் பேச்சு ,வீண் விவாதம் போன்ற குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு தானும் சீரழிந்து மற்றவர்களையும் சீரழிக்கின்றார்கள்.எல்லோரும் பட்டுத்தான் திருந்த வேணும் என்றால்,இந்த உலகம் பட்டுப் போய்விடுமே. கொஞ்சம் சிந்தியுங்க.

அன்புடன்

காவேரி

No comments:

Post a Comment