மக்களிடையே பெருகி வரும் மாற்றுத் திறனாளிகள்
உடல் உறுப்புகளில் ஒன்றை இழந்தவரை ஊனம் என்று
சொன்னால் அது அவர் மனதைப் புண்படுத்தும் என்று
உருவாக்கினார்கள் .இது ஒரு விதத்தில் சரியானதே .
ஏனென்றால் ஊனமுற்றோர் பெரும்பாலும் தங்கள்
திறமையை வேறொரு விதத்தில் வெளிப்படுத்திக்காட்டும்
வலிமையை வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள்
உடல் ஊனமாக இருந்தாலும் மனம் ஊனமாக
இல்லாதிருந்தால் அவர் இந்த மாற்றுத் திறனை
சுயமாக வளர்த்துக் கொண்டு பிற்காலத்தில்
சிறப்பாக வெளிப்படுத்திக் காட்ட முடியும் .
இதற்ககு ஹெலன் கெல்லர் சரியான எடுத்துக்காட்டு
இவர் குழந்தையாக இருந்த போது நோய்வாய்ப்பட்டு
பார்வை,பேச்சு,கேட்கும்திறன் எல்லாவற்றையும்
இழந்தார் .எனினும் மனம் தளராமல் படித்து பல்கலை
கழகத்தில் பட்டம் பெற்றார். .சமுதாயத்தில் எழுச்சியைத்
தூண்டும் வண்ணம் பல கட்டுரைகளை எழுதினார். .
ஆதரவற்ற மக்களின் குரலை எதிரொலித்து அவர்களின்
மேம்பாட்டிற்காக மிகுந்த பொருள் திரட்டிக் கொடுத்தார் .
பார்வை இழந்தவர்களின் மறுவாழ்விற்காக உதவுவதை
தன வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .
பார்வை,பேச்சு, கேட்கும்திறன் இல்லாத ஒரு
பெண்மணியால் இப்படி சாதிக்க முடிகிறது என்றால்
எல்லா உடல் தகுதிகளையும் சக்தியும் கொண்ட
நம்மால் என்னென்னவெல்லாம் சாதிக்கமுடியும்.?
என்னுடைய பார்வையில்இந்த உண்மையான
மாற்றுத் திறனாளிகலிருந்து வேறுபட்டு போலியான
மாற்றுத் திறனாளிகள் இன்றைக்கு சமுதாயத்தில்
வெகுவாக அதிகரித்து வருகிறார்கள் .
உறுப்பை இழந்து உடலால் ஊனமாகி அவ்வுறுப்பால்
பயன் பெறமுடியாததால் திறமையை வேறு
விதங்களில் வளர்த்துக் கொண்டு வெளிப்படுத்துவோரை
நேர்மறை (Positive ) மாற்றுத் திறனாளி என்று கூறலாம் .
ஆனால் உடல் உறுப்புகள் யாவும் சரியாக இருந்தும்
சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர்களை எப்படி
அழைப்பது ? உறுப்பு இருந்தும் பயன்படுத்திக்
கொள்ளதவரைப் பொறுத்த மட்டில் அவர் அந்த உறுப்பு
இல்லாத ஊனமே ஆவார். மனஊனத்தை மறைப்பதற்காக
அவர் பெரும்பாலும் தீய செயல்களில் மறைமுகமாக
ஈடுபடுவார் . இவர்களை எதிர்மறை (negative ) மாற்றுத்
திறனாளிகள் எனலாம் . சமுதாயத்தில் இன்றைக்கு இந்த
எதிர்மறை மாற்றுத் திறனாளிகள் பல்கிப் பெருகி
வருகின்றார்கள் . கை கால்கள் நன்றாக இருந்தும்
உழைக்க மறுத்து பிறர் உடைமைகளை அபகரித்துக்
கொள்பவர்கள் , மூளை இருந்தும் பாடத்தைப் படித்துப்
புரிந்து கொண்டு தேர்வு எழுதாமல் , காப்பி அடித்து
எழுதுகின்ற மாணவர்கள் ,வாக்குறுதிகளால் மக்களை
ஏமாற்றி பொதுப் பணத்தையும் ,சொத்தையும் கொள்ளை
அடிக்கின்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள்
இவர்களை எதிர்மறை மாற்றுத் திறனாளிகள்
என்று அழைக்காமல் எப்படி அழைப்பது ?
வீட்டிற்கும் நாட்டிற்கும் இவர்காளால் அவப்பெயர்
.இவர்கள் எல்லோரும்
தங்களின் அக ஊனத்தை அறியாதவர்களே ஆவார்.
No comments:
Post a Comment