Monday, July 25, 2011

eluthaatha kaditham

எப்போதும் சுதந்திரமாக இருப்போமே .


வாழ்க்கை என்பது மிகமிக எளிமையானது. நாம் தான்அதைச்

சிக்கலாக்கிக் கொண்டு தவியாய் தவிக்கிறோம். இதற்குக்

காரணம் மனதளவில் நாம் எப்போதும் சுதந்திரமாக

இருப்பதில்லை.

சிக்கிக் கொள்வதற்கும்,சிறைப்படுவதற்கும் காரணம்

பிரச்சினைகள் தான். பிரச்சினைகளை தேவையில்லாமல்

நம்முடனேயே தேக்கி வைத்துக்கொள்கிறோம். நம்மைத்

தீண்டாதிருந்தாலும்,தீண்டி விட்டு விலகி இருந்தாலும் ,

நாம் அவற்றை விட்டுவிடுவதில்லை. கை விலங்கைப்

போல மன விலங்கை நமக்கு நாமே மாடிக் கொண்டு

காலமெல்லாம் அவதிப்படுகிறோம்.


சுதந்திரத்தின் உண்மையான பொருள் விளங்காதவர்கள்

தாம், தன மனப் போக்கிலேயே, தவறாக இருந்தாலும்

அப்படியே சிந்திப்பதும், குற்றமாக இருந்தாலும் அதையே

செய்வதும்தான் தனி மனிதச் சுதந்திரம் என்று தவறாகப்

பொருள் கொள்கிறார்கள்.

சுதந்திரம் என்றால் உனக்கு ஒரு பொருள் ,மற்றவனுக்கு

வேறு பொருள் இல்லை. எல்லோருக்கும் ஒரே பொருள்

கூறுமாறு இருந்தால்தான் அது உண்மையான சுதந்திரம்.

இதன் அடிப்படையில்,சுதந்திரம் என்பது காலமெல்லாம்

தொடர்ந்து வெற்றிநடை போடும் இயற்க்கையைப்போல,

இயற்கையான சிந்தனைகளையும் ,செயல்களையும்

செய்வதுதான் என்று பொருள் விளக்கம் கூறலாம். .இப்படிப்

பட்ட அணுகுமுறை மட்டுமே பிறருடைய சுதந்திரத்தில்

குறுக்கீடு செய்வதில்லை.

எதைப் படிக்க வேண்டும் ,எதைப் படிக்கக் கூடாது, எதைப்

பார்க்க வேண்டும் எதைப் பார்க்கக் கூடாது, எதைக் கேட்க

வேண்டும் ,எதைக் கேட்கக் கூடாது,எதைச் செய்ய வேண்டும்

எதைச் செய்யக் கூடாது என எல்லாவற்றிலும் தேர்வு செய்யும்

மனப்பான்மையை ஒருவருடைய சுதந்திரம் வளக்கிறது .

சுதந்திரமாகச் சிந்தித்தாலே சுதந்திரமாக வளர முடியும்,

சுதந்திரமாக வாழ்ந்தாலே சுதந்திரமாகச் செயல் படமுடியும்.

எனவே சுதந்திரமாகச் செயல்படுவதிற்கு மட்டுமிற்றி,

சுதந்திரமாகச் சிந்திப்பதற்குக் கூட ஒரு தைய்ரியம்

இருக்க வேண்டும். (தவறாகச் சிந்திப்பது வேறு,

சுதந்திரமாகச் சிந்திப்பது வேறு )

போட்டி ,பொறாமை,பேராசை,இழப்பு ,துன்பம் துயரம் .

வருத்தம். கோபம் போன்றவற்றால் ஏற்படும் மன

உளைச்சல் சுதந்திரமான சிந்தனைகளைத் தொடக்க

நிலையிலே வேரறுத்து விடுகிறது .

பாசம்,நேசம்,அன்பு,நட்பு, நீதி,நேர்மை,தானம் ,தர்மம் ,

மகிழ்ச்சி,நெகிழ்ச்சி போன்றவை மனதை உற்ச்சாக

மூட்டுகின்றன .இச்சூழல் சுதந்திரத் தனமான

சிந்தனைககள் தோன்ற அனுகூலமாய் இருக்கிறது.

சுதந்திரம் என்பது நற்ப்பண்பினங்களின் சேர்க்கை

என்றால் அதில் காணப்படும் ஒவ்வொரு குறைபாடும்

மனிதர்களுடைய நேர்மைத்தனத்தைச் சீரழிக்கிறது

என்று கூறலாம். இவை இரண்டிற்கும் உள்ள

தொடர்பைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறும் போது

சுதந்திரத் தனமான சிந்தனைகளின் வறுமையால்

ஏற்படும் இழப்புகளையும் தெரிந்து கொள்ளமுடிவதில்லை .

No comments:

Post a Comment