Monday, July 25, 2011

eluthaatha kaditham

எதிரிகளை ஜெய்க்க விடலாமா ?


போட்டித் தேர்வில் பெருவாரியான மாணவர்கள் தோல்வியுற்று

கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர் . உற்சாக மூட்ட வேண்டிய

அவசியத்தை உணர்ந்த ஒரு பேராசிரியர் அம்மாணவர்களை

அழைத்து ஆறுதலும் அறிவுரையும் கூறினார்.

" யாராவது எதிரிகளை ஜெய்க்க விடுவார்களா ? " என்று

பேராசிரியர் கேட்க ,அதற்கு "மாட்டார்கள் " என்று ஒருமித்த

குரலில் மாணவர்கள் பதில் கூறினார்கள்.

பேராசிரியர் பலமாகச் சிரித்துவிட்டு ,"நீங்கள் எல்லோரும் பொய்

சொல்கின்றீர்கள் . உங்களுக்கு நீங்களே பொய்யராக இருக்கும்

வரை நீங்கள் வெற்றி பெறுவது என்பது உங்கள் முயற்சியின்

பலனாக இல்லாது,குருட்டு அதிருஷ்டமாகவே இருக்கும் "

என்றார்.

மாணவர்களிடையே சலசலப்பு சற்று அடங்கியவுடன்,

"இதை நான் தக்க ஆதாரத்துடன் தான் கூறுகின்றேன் "

என்று கூறிவிட்டு விளக்கத் தொடங்கினார்.

" மாணவர்களே,எதிரிகள் கண்ணுக்குத் தெரியும்படி புற வெளியில்

மட்டும் இருப்பதில்லை. கண்ணுக்குத் தெரியாமல் அக வெளியிலும்

இருப்பதுண்டு. இதைத்தான் உள் எதிரி என்றும் மனிதனுக்குள்

ஒரு மிருகம் என்றும் கூறுகின்றார்கள் .ஒவ்வொரு

மனிதனுக்குள்ளும் இந்த எதிரி வளர்ந்து வருகிறான் .அவன் மாறு

வேஷம் போட்டு ஏமாற்றுவான்,

எண்ணங்களை கலைத்து தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவான் ,

சுகம் தேடும் வேலையில்லச் சோம் பேரியாக்குவான் . மனக்

கண்ணாடியில் அவன் உன்னைப் போலவே காட்சிதருவதால் ,அவன்

வேறு நீ வேறு என்பதை அறியமுடிவதில்லை. பெரும்பாலும்

அவனுடைய கில்லாடித் தனமானஏமாற்று வேலைகளில்

எல்லோரும் ஏமாந்தே போகின்றார்கள்

சொல்லப்போனால் நம் மனதிற்குள்ளே இரண்டு மிருகங்கள்

இருக்கின்றன தெரியுமா ? " என்று சொல்லிவிட்டு

மாணவர்களின் முகத்தில்

ஏற்படும் மாற்றங்களை கவனித்தார் பேராசிரியர் .

"அப்படியா ?" ஆச்சரியத்துடன் கேட்டனர் மாணவர்கள்.

" ஆமாம் ,ஒரு மிருகம் பால் தரும் பசு போன்றது. வீட்டில்

வளர்க்கப்படும் சைவ விலங்கு . நற்பண்புகள் ,

ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் ,நேர்மை ,

நியாயம் இவை மட்டுமே இதற்குத் தெரியும். மற்றொரு

மிருகம் கொடிய காட்டு விலங்கு போன்றது. அசைவ

விலங்கு .தீய பண்புகள் ,அழிவுப்பூர்வமான எண்ணங்கள்,

கொடுமை, அநீதி போன்றவைகள்

மட்டுமே இதற்குத் தெரியும். பசு தன் போக்கில் இருந்தாலும் காட்டு

விலங்கு எப்போதும் அதை அழிக்கவே நினைக்கும்.

பசுவை பாதுகாப்பாக நீ வளர்க்காவிட்டால் ,ஒருநாள்

அந்தப் பசு காட்டு விலங்கிற்கு இரையாகிவிடும் .



உனக்குள் உலவும் இந்த காட்டு விலங்கைச் சிறைப் படுத்தி

ஒரு கட்டுக்குள் வைக்காவிட்டால்,உங்கள் எதிரிகள் ஜெய்ப்பதை

ஒருபோதும் தடுத்து நிறுத்திக்கொள்ள முடியாது. அப்போது

உங்கள் வெற்றிக்குத் தோல்விகள் ,

தோல்விக்கு வெற்றிகள் வந்த சேரும்", என்று சொல்லி தன்

நெடிய உரையை முடித்தார் பேராசிரியர்..

No comments:

Post a Comment