தன்னம்பிக்கை பெறுவது எப்படி ?
எல்லோரும் தன்னம்பிக்கை பெற்றவர்கள் போலச் 
செயல் படுகின்றார்கள் ,பேசுகின்றார்கள் .ஆனால் 
அவர்கள் எல்லோரும் வாழ்கையில் வெற்றி 
பெறுவதில்லை .ஒரு சிலர் மட்டுமே வாழ்கையில் 
கொண்டுள்ள தன்னம்பிகையினால் வெற்றி 
பெறுகின்றார்கள், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாய் 
திகழ்கிறார்கள்.அப்படியென்றால் உண்மையிலேயே 
தன்னமைபிக்கை உடையவர்கள் மிகக் குறைவே. 
உண்மையில் தன்னம்பிக்கை உடையவர்கள் எப்போதும் 
தங்களை அப்படி வெளிக்காட்டிக் கொள்வதில்லை .
ஏனெனில் அது அவர்களுடைய குறிக்கோள் இல்லை. 
அப்படிச்செய்ய முயற்சித்தால் குறிக்கோள் தடம் மாறிப்
போகும். அதை நிலை நாட்டுவதே குறிக்கோளாகி ,
குறிக்கோள் எல்லை சுருங்கிப் போய்விடும். 
தன்னம்பிக்கை பெறுவது எப்படி என்று சொல்வது எளிது. 
ஆனால் அதைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் 
இல்லை. இது மனதின் அழகு என்பதால் பிறரால் அது 
இருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் கணித்துவிட
முடிவதில்லை அதனால் எல்லோராலும் அது 
இல்லாமலேயே பிறரை ஏமாற்றிவிடமுடிகிறது. 
தன்னம்பிக்கை பெறுவதற்கு முதலில் வேண்டுவது மனத் திண்மை,அலைபாயாத மனம்,தேவைக் கேற்ற குறிக்கோள் ,
குறிக்கோளுக்கேற்ற உழைப்பு,உழைப்புக்கேற்ற முன்திட்டம் 
இவை எல்லாம் ஒரு சேரத் தேவை .இதில் ஏதேனும் ஒன்று 
குறை பட்டாலும் வெற்றி இலக்கை எட்ட முடியாது. 
நாம் கொடுக்கக் கூடிய எந்த அறிவுரையும் ,சாதாரண 
சூழ்நிலைகளுக்குப் பொருந்தி வரக்கூடியதாகவும் ,
இயல்பாக நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க 
வேண்டும். அப்படிப் பட்ட அறிவுரைகள் மட்டுமே இயற்கையானதாகவும்,எல்லோருக்கும் 
இணக்கமானதாகவும் இருக்கும் . சில சமயங்களில் 
நம்முடைய அபரிதமான ஈடுபாடு காரணமாகக் 
கூறப்படும் அறிவுரைகள் பிள்ளைகளின் 
பின்னேற்றத்திற்கு காரணமாகி விடுகின்றன. 
நோய்க் கிருமிகள் நுழைய முடியாத பாதுகாப்பான 
அறைக்குள் வளர்க்கப்படும் ஒரு குழந்தை ,அந்த 
அறையை விட்டு வெளியேறி சாதாரண சூழ்நிலைக்கு 
வரும் போது அந்தக் குழந்தை எந்த நோயால் 
தாக்கப்படக்கூடாது என்று காத்தோமோ,அதே நோயால் 
தாக்கப்படுவதற்கு பல நூறு மடங்கு அதிக வாய்ப்பைப் 
பெறுகின்றது. .அதைப் போலத்தான் எந்த எண்ணங்களின் 
தாக்குதல் இருக்கக் கூடாது என்று கருதி அறிவுரைகள் 
என்ற போர்வையால் சில காலம் பாதுகாத்தாலும் ,
அதன் பிறகு அந்த எண்ணம் தீவிரமாக் வலுப்படத் 
தொடங்கும். 
இதன் பொருட்டு அறிவுரைகள் தேவை இல்லை என்று 
கூறிவிட முடியாது. அறிவுரைகள் கூறும் போது அவை 
இயல்பாக ஏற்றுக் கொள்ளத் தக்கனவாக இருக்க வேண்டும். திணிக்கப்படுகிறது என்ற உணர்வை ஒரு சிறிதும் தருவதாக 
இருக்கக் கூடாது. 
அறிவுரைகள் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பதும் 
ஆபத்தானது. அது ஏற்றுக் கொள்ளப் படாமல் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுவதற்கு அதுவே கூட வலுவான காரணமாகி 
விடலாம்.
No comments:
Post a Comment