Tuesday, December 27, 2011

arika ariviyal

அறிக அறிவியல்

வாயிலிருந்து வெப்பக் காற்றும் குளிர்ந்த காற்றும்

அகன்ற வாயுடன் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது
வெப்பக் காற்றாக உள்ளது. ஆனால் அதே மூச்சுக் காற்றை
குவிந்த வாயுடன் வெளியேற்றும் போது குளிர்ந்து
இருக்கிறது. இந்த வேறுபாடு ஏன் ?

அகன்ற வாயுடன் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது
நுரையீரலில் உள்ள காற்று மிகக் குறைவாக இறுக்கப்பட்டு
எவ்வித விரிவாக்கமும் இல்லாமல் வளிமண்டலக்
காற்றோடு கலக்கிறது.நுரையீரலில் உள்ள மூச்சுக் காற்று
நுண்ணறைகளில் ஊடுருவி அப்பகுதியின் வெப்பநிலையை
அடைந்திருப்பதால்(உடலின் சராசரி வெப்பநிலை
வளிமண்டலத்தின் இயல்பான வெப்பநிலையைக் காட்டிலும்
ஒருசில சென்டிகிரேடு கூடுதலாகும்). வெளியேறும் காற்று
வெப்பமாக இருக்கிறது.

குவிந்த வாயுடன் காற்றை வெளிவிடும் போது ,
நுரையீரலில் உள்ள காற்று மிகக் குறைவாக
இறுக்கப்பட்டாலும் குறுகிய இடைவெளி
வழியாக விரிவாக்கம் பெறுகிறது .இப்படித்
திடீரென்று காற்று விரிவாக்கம் பெற்றால் வெப்பநிலை
தாழ்வுறும் என்பது ஜூல்- தாம்சன் விளைவாகும்

வெப்பமான் காற்றை சுவாசிப்பதை விட குளிர்ந்த காற்றை
சுவாசிப்பது எளிதானது .காற்றில் உள்ள ஈரப்பதமே
இதற்குக் காரணமாக இருக்கிறது.

No comments:

Post a Comment