Friday, December 23, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

மக்கள் வசதியாக இல்லாவிட்டாலும்,மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு .தலைவர்களின் நேர்மையான செயல்களே அன்றி,அவர்களிடமிருந்து இயந்திரத் தனமாக வெளிப்படும்
யோசனைகள் பயன் தருவதில்லை.மக்கள் இதை இன்னும்
சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.இது இன்றையத்
தலைவர்களுக்கு வசதியாக இருப்பதால் இதில் ஒரு
மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்புவதில்லை.
இருக்கும் நிலைமையை தங்களின் சுய முன்னேற்றத்திற்கு
மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .இது இனி
வரப்போகும் தலைவர்களுக்கு தவறான வழிகாட்டலாக
விளங்குகிறது.தீதில் பெரும் தீது இதுவேயாகும்.தலைவர்களின் செயல்பாடின்மையால் எதிர்காலத்தில் பெரிய மாற்றம்
ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதை
இப்போதே உறுதியாகச் சொல்லலாம்.

நான் என் வீட்டுச் செலவை என் வருமானத்திற்குள்
இருக்குமாறு வைத்துக்கொள்கிறேன்.வருமானத்திற்கு மீறிய
திட்டங்களை தீட்டி வைத்துக் கொண்டு அதற்கான
வருமானத்தைத் தேடுவதில்லை. ஏனெனில் தேடிக்
கிடைக்காவிட்டால் மனம் தவறான வழிகளில் பொருள்
புரட்டப் புறப்பட்டுவிடும்.வருமானம் அதிகரிக்க நேர்மையாக் முயற்சிப்போம்.அப்படி வரும் போது வளர்ச்சிப்
பாதையில் முன்னேறுவோம்.

பொதுவாக படித்த பண்புள்ள,கட்டுப்பாடான இந்தியக்
குடிமகன்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.வரம்பு
மீறிய செலவு செய்து விட்டு சூடு போட்டுக் கொண்டவர்கள்,
இன்றைக்கு வாழ்க்கையைத் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.மக்களின் வாழ்க்கை முறை இப்படி
இருக்கும்போது அரசு மட்டும் வேறுபாடாய்
திட்டமிடுவதேன்.

No comments:

Post a Comment