Tuesday, December 27, 2011

vinveliyil ulaa

அல்டிபாரன் (Aldebaran )




இக் கூட்டத்தில் மிகவும் பிரகாசமான விண்மீன் அல்டிபாரன் என்றழைக்கப்படும்
ஆல்பா டாரி என்ற விண்மீன்.இதைத் தமிழர்கள் ரோகினி எனக் குறிப்பிடுகின்றனர்
இது ஹையாடெஸ் (Hyades )எனப்படும் தனிக் கொத்து விண்மீன் கூட்டத்திற்கு
அருகாமையில் உள்ளது .எனினும் அல்டிபாரனும் ஹையாடெஸ்ஸும் வெவ்வேறு தொலைவுகளில் உள்ளன .
அல்டிபாரன் மஞ்சளும் .சிவப்பும் கலந்த ஒரு விண்மீன் .இதன் தோற்ற ஒளிப்
பொலிவெண் ௦0௦.75 முதல் ௦0.95 வரையுள்ள நெடுக்கையில் தொடர்ந்து சீரற்ற
முறையில்
மாறிக்கொண்டே இருப்பதால் இது மாறொளிர் வகை விண்மீனாகும்.இதன் தொலைவு சுமார் 65 -70 ஒளி ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர் ..
இது நமக்கு அருகாமையில் இருக்கும் பெரு விண்மீன்களுள் ஒன்றாகும் .
இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 30 மடங்கு என
அறிந்துள்ளனர் .பிரகாசமிக்க 20 விண்மீன்களின் பட்டியலில் இது 14 வது
இடத்தில் உள்ளது.


எல்நாத் (Elnath ) எனப்படும் பீட்டா டாரியின்தோற்ற ஒளிப்பொலிவெண்
1 .65 ,சார்பிலா ஒளிப்பொலிவெண் - 1 .37 .இது டாரஸ் வட்டார விண்மீன்
கூட்டத்திற்கு அருகாமையில் உள்ள ஔரிகா (Auriga ) எனும் விட்டாரா விண்மீன்
கூட்டத்திலுள்ள பிரகாசமிக்க விண்மீன்களின் கட்டமைப்பாலான ஐங்கோண
கட்டத்தின் அடியில் அமைந்துள்ளது. இது சுமார் 131 ஒளி ஆண்டுகள்
தொலைவில் இருப்பதாக அறிந்துள்ளனர்.
இக் கூட்டத்திலுள்ள விண்மீன்கள் தோராயமாக ஆங்கில எழுத்து 'V ' வடிவில்
அமைந்துள்ளன. இதில் ஆல்பா,பீட்டா டாரிகள் வெவ்வேறு புயங்களில்
இருக்குமாறும் ,அவற்றின் சந்திப்பில் ஹையாடெசும் அதன் அருகாமையில்
ஆல்பா டாரி இருக்குமாறும் உள்ளன .அருகாமையில் இருப்பதால்
அல்டிபாரன் என்ற ஆல்பா டாரி ,ஹையாடெஸ் கொத்து விண்மீன்
கூட்டத்தில் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில்
அவையிரெண்டும் சுமார் 70 ஒளியாண்டுகள் தொலைவு தள்ளி உள்ளன.

No comments:

Post a Comment