Saturday, December 10, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் ஏற்பட்ட
தீ விபத்து காரணமாக 82 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் .
அதற்கு அரசு மருத்துவ மனை நிர்வாகிகள் 6 பேரைக் கைது செய்துள்ளது .
தவறு மருத்துவமனை நிர்வாகிகளிடம் மட்டும் இல்லை.பல ஆண்டுகளாக
இப்படி வசதி இல்லாத மருத்துவ மனை எப்படி இயங்கிவந்தது?
இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் ? பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கி
இருந்தால் அந்த அதிகாரிகளும் தண்டனைக்குரியவர்களே .
இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள் .இது போல நம் நாடெங்கும்
பல மருத்துவ மனைகள்,திரை அரங்குகள் ,கலைக் கூடங்கள் ,கண்காட்சி
யகங்கள்,பேருந்துகள் உள்ளன.முறையான அனுமதியும்,தரச்சான்றிதழும் இல்லாமல்
இவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகின்றன. இதுபோல விபத்துகள்
நிகழும் போது மட்டும் விஷயங்கள் ஊடங்கள் மூலமாக வெளியில் தெரிய வருகின்றன. .
prevention is better than cure என்பதை எப்போதுதான் நம் அரசாங்கம்
தெரிந்து கொள்ளப் போகிறதோ ?

No comments:

Post a Comment