Wednesday, December 28, 2011

vinveliyil ulaa

அல்டிபாரனின் அதிசயங்கள்





அல்டிபாரன், ஆர்க்டூரஸ்,போலக்ஸ் போன்ற விண்மீன்களின் சுற்றுப் பாதை வேகத்தின்
அளவீடுகள்,1993 ல் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.அப்போது அல்டிபாரன் பற்றிய
சில புதிய உண்மைகள் தெரியவந்தன.அல்டிபாரன் சுற்றுப் பாதை வேகத்தில் ஏற்றத்
தாழ்வுகள் மிகவும் அதிகமாக உள்ளன.இது அதற்கு ஒரு துணை விண்மீன் இருக்கலாம்
என்பதற்கு ஒரு வலுவான காரணமாக இருந்தது. கணக்கீடுகளைக் கொண்டு அதன்
துணை விண்மீனின் குறைந்த அளவு நிறை 11.4 மடங்கு,நமது சூரியக் குடும்பத்திலுள்ள
வியாழனின் நிறையைப் போல உள்ளது என்றும், அதன் சுற்றுக் காலம் 643 நாட்கள்
என்றும் அதற்கும் அல்டிபாரனுக்கும் உள்ள இடைவெளி 2 AU(300Gm )என்றும்
தெரிவித்துள்ளன .
அல்டிபாரன் காட்சி தரும் விண் வெளியில் அதற்கு மிக நெருக்கமாக ஐந்து மங்கலான விண்மீன்களை இன்றைக்கு இனமறிந்துள்ளனர்.இது அல்டிபாரன்
ஒரு இரட்டை விண்மீனாக இருக்கலாம் என்பதற்கு ஒரு வலிமையான
காரணமாக விளங்குகிறது .அல்டிபாரனோடு காட்சி தரும் விண்மீன்களை ஆல்பாடாரி A ,B ,C ,D மற்றும் E எனக் குறிப்பிட்டுள்ளனர் .இதில் ஆல்பாடாரி A மட்டும் பிரகாசமானதாக உள்ளது. இதன் சார்பிலா
ஒளிப்பொலிவெண் - ௦௦௦0 .63 ஆகும் .
விண் இயற்பியலாரின் சில கணிப்புகள் ,ஆல்பாடாரி B யின் தன்னியக்கப் பெயர்ச்சி இயக்கமும்(Proper motion )
தோற்ற இடப் பெயர்ச்சியும் (parallax ) அல்டிபாரனை மிகவும் ஒத்திருக்கிறது எனத்
தெரிவித்துள்ளன .இது அல்டிபாரன் உண்மையில் ஒரு இணை இரட்டையாக
இருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. .எனினும் ஆல்பா டாரி B மிகவும் மங்கலாக இருப்பதாலும், அல்டிபாரன் மிகவும் பிரகாசமாக இருப்பதாலும்
இதை உறுதி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
ஆல்பா டாரி C யும் D யும் ஒரு இரட்டை அமைப்பாக உள்ளது. இவை இரண்டும் ஈர்ப்பால் ஒன்றிணைந்து
ஒன்றை ஒன்று சுற்றி வருவதால் அப்படி முடிவு செய்யப்பட்டது .
இவை காட்சி வெளியில் அல்டிபாரனுக்கு அருகில் தெரிந்தாலும் உண்மையில் வெகு தொலைவில் உள்ளன .இவை இரண்டும் ஹையாடெஸ்
கூட்டத்தின் உறுப்புகளாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

No comments:

Post a Comment