Saturday, July 7, 2012

Eluthatha kaditham

எழுதாத கடிதம். மனதை நெருடிய இன்றைய பத்திரிக்கைச் செய்திகள் 1 .மதுரையில் மாணவர்களிடம் இரத்தம் உறிஞ்சும் இரத்த வங்கிகள்-தின மலர் 7-7-2012 இது பலவிடங்களில் காலங் காலமாய் நடந்து வருகிறது.தடையேதும் இல்லாததால் இத்தொண்டு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி வருகிறது.சம்பாத்தியத்தில் பங்கு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் தற்காலியத் தடைகளை ஏற்படுத்துவதுண்டு.எழுதப்படாத ஒப்பந்தத்தால் முறைகேடான எந்தத் தொழிலும் மூலதனமின்றி செழித்து வளரும் முறைகேடுகள் அரசின் அனுமதியோடு வெற்றி நடை போடுமானால் ஒரு நாடு எப்படி வளமான எதிர்காலத்தைப் பெறமுடியும்? முறைகேடுகள் மனிதநேயத்தை அழிக்கும்,உண்மையான பொருளாதாரத்தை சீரழிக்கும்.வல்லரசாகப் போகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டிற்கு இது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.நாட்டின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் அது நேர்மையாகவும் செம்மையாகவும் நடைபெற அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து முறையான சுமுதாய அமைப்புகள் மூலம் கண்காணிக்கவும் வேண்டும் இது எல்லா அரசுகளின் ஒரு பொதுப் பண்பாகும். அரசு கண்ணை மூடிக்கொண்டு சும்மாவே இருந்தால் இது போன்ற சமுதாயக் கேடுகள் பெருகிப் போவதுடன் பிற்காலத்தில் ஒருபோது மறையவே மறையாது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்து மக்களுக்குத் தெரியவரும்போது தான் அது பற்றி அரசுக்கும் தெரிய வருகிறதாம் மக்களைச் சமாதானப் படுத்த வேண்டும் என்பதற்காக ஒப்புக்காகச் சில நடவடிக்கைகள் எடுத்தது போல நடிப்பார்கள் ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிச் செயல்படுவதில் சிறிதும் முனைப்புக் காட்ட மாட்டார்கள்.அதனால் சமுதாயக் கேடுகள் பரிணாம வளர்ச்சி பெற்று ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் அரங்கேறும்.மீண்டும் மக்களுக்குத் தெரியவரும் காலம் வரை. 2.ஐ ஏ எஸ் அதிகாரி சம்பத் சஸ்பெண்டு - தினமலர் 7-7-2012 இது சரிதானா? உள்ளதை உள்ளபடி சொல்வது குற்றமா? நல்லது நடக்கும் என்றால் பொய்யும் சொல்லலாம் என்பதைப் போல அதற்காக சில சமயங்களில் உள்ளதை உள்ளபடியும் சொல்லலாம் .வெளிப்படையான ஆட்சி முறையே வெற்றிகரமான ஆட்சியாக அமையும். மறைமுகமான காரியங்களினால்தான் ஊழல் பெருக வழி வகுக்கும்.ஊழலை ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அறைகூவும் அரசு தன அதிகாரிகள் மௌனமாய் இருக்க வேண்டும் என்று சொல்வதேன்.மக்களின் எதிர்ப்பு இல்லாமல் மறைவாய் நடக்கும் எந்த சமுதாயக் கேடுகளும் அரசால் திருத்தப் பட்டதேயில்லை.நம் நாட்டில் ஊழலை ஒழிக்கவே முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.மக்களுக்கு நட்பாக இருக்கும் அதிகாரிகள் ஒரு சிலரே.அவர்களையும் இப்படி முடக்கி விட்டால் மக்களுக்கு விமோச்சனம் இல்லவே இல்லை.ஒத்தக்கை சத்தப் படாது ,தனி மரம் தோப்பாகாது .உயர் அதிகாரிகளுக்கு இது புரிந்தால் சரி 3.கழுதைக்குச் சூடு வைத்துச் சித்திரவதை -தின மலர் 7-7-2012 வாயில்லாச் ஜீவன் சொல்லி வழக்காட வழியில்லை,இரக்கப்பட யாருமில்லை நேர்மையாகச் சம்பாதிக்கத் தெரியாத சோம்பேறிகள்,தங்களைக் கட்டுப்படுத்த யாருமில்லை என்ற தைரியத்தில் கழுதைக்குச் சூடு போட்டு அதை நியாயப் படுத்தி விளக்கமும் கொடுக்கின்றார்கள்.இவர்கள் அடுத்த பிறவியில் கழுதையாய்ப் பிறந்து சூடு படப்போகின்றார்கள் அப்போது கழுதையாய்க் கத்தினாலும் உங்களை யார் கவனிப்பார்கள்? ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை இவர்கள் ஏன் மறந்தார்கள்?

No comments:

Post a Comment