Friday, November 8, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்
அரட்டை அரங்கத்தில் குறட்டை  விடாமல் எல்லோரும் உரக்கவே பேசிக்கொண்டிருந்தார்கள் 
திண்ணைப் பேச்சில் ஒரு ட்டி மன்றம் போல அது இருந்தது.வித்தியாசமான தலைப்பு என்றாலும் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் அதில் டுபாடு இருந்ததால் விவாதம் விறுவிறுப்பாகவும் இருந்தது.

யார் அதிகம் குற்றம் செய்கின்றார்கள் -லஞ்சம் வாங்குபவர்களா? லஞ்சம் கொடுப்பவர்களா
லஞ்சம் கொடுப்போர் இருப்பதினால் தானே லஞ்சம் வாங்குவோர் இருக்கின்றார்கள். லஞ்சம் வாங்குவது தப்பென்றால் லஞ்சம் கொடுப்பதும் தப்புத் தானே என்று வாதிடுவோர் பலர் இருக்கின்றார்கள்.

இரண்டு பேருமே குற்றம் செய்கின்றார்கள் .சமுதாயத்தை சீர் குலைக்கின்றார்கள் என்றாலும் லஞ்சம் வாங்குவோர் லஞ்சம் கொடுப்போரை விடக் கூடுதலாகவே குற்றம் புரிகின்றார்கள் என்று சொல்வதற்கு பல ஆதாரங்களைக் குறிப்பிடமுடியும்.
லஞ்சம் வாங்குவோர் தண்டிப்பட வேண்டியவர்கள்,கொடுப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். லஞ்சம் கொடுப்போர் வேறு பல குற்றங்கள் புரிந்திருப்பின் அது வேறு வியம்
லஞ்சம் யார் வாங்குகின்றார்கள் ? பதவி,செல்வாக்கு இவற்றை அடிப்படையாகக் கொண்டு  தன் கடமையைச் சரிவரச் செய்யாமல் தைச் செய்து கொடுக்க வேண்டியவரை இழுத்தடித்து லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் ஆகும் என்ற நிலைக்குத் தள்ளி இறுதியில் லஞ்சத்தை வாங்கிய பின்பே காரியத்தை முடித்துக் கொடுக்கின்றார்கள். லஞ்சம் கொடுக்க கூடாது என்ற கொள்கையுடையவர்கள் அரசு அலுவலகங்களில் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல்
லைக்கழிக்கப் படுகின்றார்கள்..இதனால் மக்களிடையே லஞ்சம் கொடுத்தாவது நேர்மையான காரியத்தை முடித்துக் கொள்ள முயல்கின்றார்கள். வேறு சிலர் எதிர் மறையான அல்லது தீய காரியங்களுக்காக லஞ்சம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். லஞ்சம் வாங்குவோர்  லஞ்சம் கொடுக்க அஞ்சுவதில்லை. அவர்களுக்கு தங்களின் காரியம் முடிந்தால் சரி. இதனால் லஞ்சம் வாங்குவோர் எல்லோரிடமும் லஞ்சத்தை எதிர்பார்க்கத் தொடங்குகின்றார்.லஞ்சம் கொடுப்பவர்கள் இழந்ததை மீட்டுப் பெற அதை வேறு தவறான வழிகளில் முயல்வதால் லஞ்சம் ஒரு பெருக்குத் தொடரில் சமுதாயத்தில் வளர்ச்சி பெறுகின்றது.

லஞ்சம் வாங்குவோர் சில பொய்யான நடைமுறைகளைக் கூறி காரியத்தில் ஒரு தடையை ஏற்படுத்தி லஞ்சத்தை கட்டாயமாக்கி விடுகின்றார்.இந்தப் பழக்கத்தினால் அவர் காலப் போக்கில் தம் பணியைச் சரிவரச் செய்வதில்லை. மேலும் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைக் கூடச் செய்கின்றார்.இது பிற்பாடு தெரிய வரும் போது அரசு எதுவும் செய்ய முடியாமல் தடுமாறுகின்றது. சில ஊர்களில் காலி னையிடங்களைத் தவறா பத்திரப் பதிவு செய்து கொடுத்து விடுகின்றனர்.இதற்குக் காரணம் அவர்களுக்கு சரியான விவரம் தெரியாமல் இருப்பதால் லஞ்ச மயக்கத்தில் தவறைச் செய்து விடுகின்றனர்.

No comments:

Post a Comment