Wednesday, November 6, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potentials
ந்தத் துறையில் இயல்பான விருப்பம் இருக்கின்றதோ அத் துறையில் ஆர்வம் காட்டி டுபட்டால் அதிக எதிர்ப்புக்களைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வராது. இது ஒருவருடைய விருப்பத் துறை தரும் அனுகூலமாகும்.விருப்பத் துறையைத் தீர்மானித்து அதில் போதிய திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டுவிட்டால் வெற்றிக் கோட்டையின் நுழைவு வாசல் வரை வீறு நடை போடலாம்.

திறமையில் மற்றவர்களைப் பிரதிபலிப்பதின் மூலம் புதிய சாதனைகளைச் செய்ய முடிவதில்லை. அதற்குத் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் . அதற்கு வெறும் கல்வி மட்டும் போதாது

அனுபவங்களும், அனுபவங்கள் பெற்ற அறிர்களின் தொடர்பும் தேவை.இது ஒரே நாளில் கை கூடி வரக்கூடிய விஷயமில்லை. அனுபவங்கள் மூலம் எது அனுகூலமானது எது அனுகூலமில்லாதது என்பதைத் தெரிந்து கொள்ள முடிவதால் வளர்ச்சிக்குத் தேவையான அவசியத் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடிகின்றது

போதுமென்ற பொன்மனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தனித் திறமை தேவையில்லை பிறருக்கு வி செய்வதற்கும்,தர்மம் செய்வதற்கும் தனித் திறமை தேவையில்லை. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதற்கு தனித் திறமை தேவையில்லை.மரபு வழியிலான பழக்க வழக்கங்களை  மேற்கொள்வதற்கு தனித் திறமை தேவையில்லை .இவையாவும் அசலைப் பார்த்து நகலெடுக்கும் வேலைகள் 

கற்ற கல்வியோடும் கண்டு ளித்த இயற்கையோடும் ஒட்டிய சிந்தனைகளை மீண்டும் மீண்டும் அசைபோடும் போது புதிய கருத்துககள் ண்ணத்தில் உதயமாகின்றன.அவற்றை ஓவியமாகத் தீட்டி பிறர் பார்க்க  காட்சிக்கு வைக்க விரும்பும் போது ,கருத்துக்களையெல்லாம் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஒரு புதிய உணவுப் பொருளை மைத்து பிறர் சுவைக்கப் பரிமாறும் போது உன்னுடைய முயற்சிகள் தனித் திறமைகளை மேம்படுத்தி விடுகின்றன.

No comments:

Post a Comment