Friday, November 1, 2013

Sonnathum Sollathathum

சொன்னதும் சொல்லாததும் 
அகதா கிருஷ்டி (Agatha Christie) ஒரு சிறுகதை மற்றும் துப்பறியும் கதை எழுத்தாளர்.அவர் காலத்தில் மட்டுமல்லாது இன்றளவும் எல்லா வயதினராலும் விரும்பப்படும் புழ் பெற்ற எழுத்தாளர். 1890 முதல் 1976 வரை 85 ஆண்டுகள் வாழ்ந்த இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய புனைப் பெயர் Mary westmacott. 14 சிறு கதைகளையும் 66 துப்பறியும் நாவல்களையும் டைத்துள்ளார். உலகின் மிக நீளமான நாடகத்தை எழுதியவரும் இவரே 
இன்றுவரை 4-5 பில்லியன்(109) பிரதிகள் வரை இவருடைய கதைப் புத்தகங்கள் உலகமெங்கும் விற்றுள்ளன. 103 மொழிகளில் மொழியாக்கம் செயப்பட்டுள்ளது.மிக அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு சில நூல்களுள் அகதா கிருஷ்டியின் கதைப் புத்தகங்களும் ஒன்று.
தன் படைப்பாற்றல் மூலம் பெரும் பொருள் சம்பாதித்தாலும் படிப்பறிவு குறைபாட்டினால் தன் வரவு செலவு க்கைக் கூட அவரால் சரிவரக் கவனிக்க முடியவில்லை.Dysgraphic என்ற கோளாறால் அவதிப்பட்டார்.இவரால் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க முடியாது.ண்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார். அடிக்கடி பிழையாக ண்களை  நினைவுகூர்வார்.இருந்தாலும் அவர் தன் வாழ்க்கையில் சாதிக்க நினைத்தை சாதித்தே விட்டார்.
தன்னிடம் இருக்கக்கூடிய திறமைக்கு எந்தத் துறையில் நுழைந்தால் தன்னால் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்பதை அத் துறையில் ஈடுபடுவதற்கு முன்னரே தீர்மானித்து செயல்பட ஆரம்பித்ததால் அவரால் வெற்றி பெற முடிந்தது 
இவருடைய பொன் மொழிகளில் சில.
“வாழ்க்கையில் நிகழும்  மிக மிக மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று என்னைப் பொருத்த வரையில் சிறு குழைந்தைப் பருவம் தான்”. மீண்டும் திரும்பி வராத குழந்தைப் பருவம் உலகில் எல்லோருக்கும் ஒரு இனிய பருவம்தான் 
“ஒரு புத்தகம் எழுதத் திட்டமிடுவதற்கு மிச் சிறந்த நேரம் என்பது உணவருந்தும் மேஜையில் அமர்ந்துகொண்டு உணவருந்தும் போது தான்” 

இவர் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. “நான் ஒரு தொல் பொருள் ஆய்வாளரைத் திருமணம் புரிந்து கொண்டேன் னெனில் எனக்கு வயதாக ஆக என் கணவர் என்னை மிகவும் அக்கறையோடு கவனித்துக் கொள்வார்”.தொல்பொருள் ஆய்வாளர்களே மிகச் சிறந்த கணவன்மார்கள் என்பது இவருடைய கருத்து.
“தீயசக்தி என்பது தேவநிலையாளரின்,மீ மனிதர்களின் தனித் தன்மையில்லை.அது ண்மையில் கீழ்த்தரமான மனிதர்களின் புத்தி” 

“ஒவ்வொரு கொலைகாரருக்கும் சில பழய நண்பர்கள் இருப்பார்கள்”


துப்பறியும் கதைகளை எழுதுவதால் அவருக்கு குற்வாளிகள், கொலைகாரர்களின் உளவியல் பற்றி தெளிவாக அறிந்திருந்தார் என்பதை அவை சுட்டிக் காட்டுகின்றன.

No comments:

Post a Comment