மூளையின் நலங் காக்கும்
உணவுப் பொருட்கள்
ஒருவர் தன் வாழ்க்கையில் புத்திசாலித் தனமாகச் செயல்பட மூளை பயனுறு
திறன் மிக்கதாக இருக்கவேண்டும் . மூளையின் திறன் என்பது வளர்ச்சி மட்டுமல்ல, சிந்தித்தல், விவரங்களை சரியாகப்
பதிவு செய்தல், நினைவாற்றல், மனத்தைக் கட்டுப்
படுத்துதல், பதிவு செய்த
விவரங்களைச் சரியான நேரத்தில் மீட்டுப் பெறுதல், உடல் உறுப்புக்களை
பயனுறுவகையில் செயல்படுமாறு கட்டளையிட்டல் போன்றவைகளாகும்.
இந்த மூளை ஏறக்குறைய
நாம் இப்போது பயன்படுத்தும் கணினியைப் போன்றது.. கணினி விரைந்து
செயல்பட்டாலும் மூளை போல சுயமாகச் சிந்தித்து செயல்படாது . கணினியை இயக்க ஒருவர்
வேண்டும் ஆனால் மூளை புறஉதவியின்றித் தானாகவே இயங்கக் கூடியது. மூளை அப்படி இயங்க கணினி
போல அதில் போதிய பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க
வேண்டும். இதை நாம் படிக்கும் போதும் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தும் செய்து
கொள்கின்றோம்.
மூளை நலமாக இருக்க
வேண்டுமென்றால் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் இயக்கமும் நலமாக இருக்கவேண்டும். உடல்
உறுப்புகள் நலமாக இருக்க வேண்டுமென்றால் மூளை நலமாக இருக்க வேண்டும் .. அதாவது மூளையின் நலத்தில் உடலின் நலமும் அடக்கம் எனலாம். மூளை எல்லா
நேரங்களிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால்
உடலும் உள்ளமும் நலமாக இருக்க வேண்டியது
அவசியம். உடல் என்பது உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஆகும். உள்ளம் என்பது மனம். மூளையிலுள்ள
பதிவுகளை இதன்மூலம் தான் தெரிந்துகொள்ள முடியும்
மூளையை நலமாக வைத்திருக்க
புரோட்டீன்கள் ,கொழுப்பு , கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள், தாதுஉப்புகள் என
அனைத்தும் அவசியம் ..உணவில் இந்த சத்துக்கள்
தொடர்ந்து அளிக்கப்பட்டால் தான் உடல் மட்டுமின்றி மூளையும்
சிறப்பாகச் செயல்படும் .
புரோட்டீன்கள்
மூளைக்கு மிகவும் முக்கியமான சத்துப் பொருள் .செய்திப் போக்குவரத்துக்குப்
பயன்படும் நரம்புகளில் உள்ள நியூரான் செல்கள் இந்த புரோட்டீன்களால் ஆனதாக
இருக்கின்றது. 22 வகையான அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கையினால்
ஆன சிறிய மூலக்கூறுகளின் சங்கிலித் தொடரால் நியூரான் செல்கள் உருவாக்கப்படுகின்றன.அமினோ அமிலங்கள்
யாவும் புரோட்டீன்களாகும். எனவே புரோட்டீன்
குறைபாடு பதிவேற்றம், பதிவிறக்கம், நினைவாற்றல்
இவற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி மூளையின் பயனுறு திறனைக் குறைத்து விடுகின்றது
இந்த அமினோ அமிலங்கள் உடலில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உணவுப்
பொருட்களிலிருந்தே பெறவேண்டும் மூளைக்குப்
பயன்தரக்கூடிய புரோட்டீன்கள் பீன்ஸ், பருப்புகள், முட்டை, பால் மற்றும் வெண்ணை, கொழுப்பில்லாத
இறைச்சி போன்றவற்றிலிருந்து கிடைக்கின்றன புரோட்டீன்கள்
கணினியில் இருக்கும் மின் சுற்றுகள் போல. உடலில் இந்த இணைப்புகள் உருவாவதும்
புதிப்பிக்கப்படுவதும் புரோட்டீன்களினால் தான்..
கொழுப்பு மூளையில் உள்ள
நரம்பு மண்டலத்தை பிற
நுண்ணமைப்புகளிலிருந்து காப்பு செய்கின்றன .மூலக்கூறு கட்டமைப்பைப் பொறுத்து
கொழுப்புக்களை செறிவூட்டப்பட்டவை, செறிவூட்டப்படாதவை
என இரு வகையாகப் பிரிக்கலாம் . தாவர எண்ணெய்கள் பொதுவாக செறிவூட்டப்படாதவை . இவை
செய்திப் பரிமாற்றத்திற்குத் துணை செய்யும் மூலக்கூறுகளை உருவாக்கப்
பயன்படுகின்றது. மாமிசக் கொழுப்புகள் பெரும்பாலும் செறிவூட்டப்பட்டவை இது உடலில் அளவுக்கு அதிகமானால் இதய நோய், இதயத் தாக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன .
கார்போ ஹைட்ரேட்
மூளைக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றது இது கணினி யில் இருக்கும் ஆற்றல் மூலம்
போல. உடலுக்குக் கிடைக்கும் மொத்த ஆற்றலில் 5 ல் ஒரு பங்கை மூளை தன்
தேவைக்காக எடுத்துக்கொள்கிறது. எனவே உணவுப் பற்றாக்குறையால் அதிகம்
பாதிக்கப்படுவது மூளையை]தான் . எளிமையான கார்போ ஹைட்ரேட்டுக்களை விட சிக்கலான
கார்போஹைட்ரேட்டுக்கள் மூளைக்கு மேலானது கோதுமை, அரிசி போன்ற
தானியங்கள், பருப்பு, பயறுகள் போன்றவற்றில் சிக்கல் கார்போ ஹைட்ரேட்டுக்களும், சீனி , சக்கரையில் எளிய
கார்போஹைட்ரேட்டுக்களும் உள்ளன. எளிய கார்போஹைட்ரேட்டுக்கள் எளிதாகச் செமிக்கப்படுவதால்
ரத்த ஓட்டத்தில் அதிக அளவு சக்கரையை உடனுக்குடன் செலுத்தி
விடுகின்றது. இதைக் கட்டுப் படுத்த இன்சுலினை உடல் அளிக்க வேண்டும் இதையும் மூளை செய்வதினால்
மூளை மாறி மாறி தேவைப்படும்
அத்தியாவசியமான குளுக்கோஸ் மிகையாகவும் பற்றாக்குறையாகவும் இருக்கும் நிலைக்கு ஆளாகின்றது இதனால் ஏற்படும்
உடல் நலக் குறைபாடுகள் உயிருக்க ஆபத்தான
நிலைக்கு இட்டுச் செல்லலாம்.
சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள்
செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால்
அது சீராக செரிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றலையும் சீராகக் கொடுக்கின்றது. அதனால் உடலோ மூளையோ விரைவில்
சோர்ந்து போய்விடுவதில்லை.
வைட்டமின்கள்
உடலுக்குள் நிகழும் உயிர் வேதியியல் வினைகளுக்கு தேவையாக இருக்கின்றது எல்லா வைட்டமின்களும்
உடலுக்கு சிறிதளவு தேவை என்றாலும் மூளைக்கு முக்கியமாக பி வகை வைட்டமின்களே .
நரம்பு வழி செய்திப் போக்கு வரத்திற்கு வைட்டமின் B
1
தேவையாய்
இருக்கின்றது. மூளையின் அறிவு நுட்பத் திறன், நினைவாற்றல்
போன்றவை இந்த வைட்டமின் B 1 உடன்
தொடர்புடையதாக இருக்கின்றது.
நலமான மூளைக்கு எல்லா வகையான தாது உப்புக்களும்
அவசியம். இவற்றை ஒருவர் பூமியிலிருந்தே பெறமுடியும் என்பதால் தாவர உணவுகளிருந்தும்
தாவர உண்ணிகளான மிருகங்களின்
இறைச்சியிலிருந்தும் மட்டுமே அவற்றைப்
பெறமுடியும்
பழங்கள் வைட்டமின்களையும் , தாது
உப்புக்களையும் தரக் கூடியன வாழைப்பழம் , நெல்லிக்கனி போன்றவை குறைந்த செலவில் இச் சத்துக்களை
தருகின்றன
உருளைக் கிழங்கு . கோதுமை ரொட்டி ,ஈரல் , கவுனி அரிசி போன்றவை வைட்டமின் B சத்து மிகுந்தவை. வைட்டமின்கள்
பெரும்பாலும் நீரில் கரைக்கூடியவை. இவற்றை உடலில் சேமித்து வைக்க இடமில்லாததால் உபரியான
வைட்டமின்கள் சிறுநீர் மூலம்
வெளியேறிவிடுகிறது ' இந்த வைட்டமின்கள் நம் உடலில் வேதி வினைகளின் மூலம்
நச்சுப் பொருள் உற்பத்தியை தடை செய்கின்றன, சத்துக்களிலிருந்து
ஆற்றலை எடுக்கப் பயன்படுகின்றன.