Friday, July 14, 2017

animal's habit

விலங்குகளின் வினோப் பழக்கம்
பிறந்த ஐந்து சிங்கக்குட்டிகளில் ஒன்றுதான் தனது முதலாமாண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இதற்கு காரணம் நாடோடி ஆண் சிங்கங்கள். இந்த நாடோடிச் சிங்கங்கள் தனெக்கென ஒரு ராஜ்யத்தைத் தேடி அத்துமீறி மற்றொரு சிங்கத்தின் பகுதிக்குள் நுழைபவை. அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் தலைமை ஆண் சிங்கத்திடமிருந்து ,அங்கிருக்கும் பெண் சிங்கங்களோடு உறவாடும் உரிமையை தட்டிப் பறிக்கும் முயற்சியில்  வெற்றி பெற்ற பின்பு , தலைமைச்  சிங்கத்தின் வாரிசுகளான சிங்கக் குட்டிகளைக் கொன்று விடுகின்றது
பெண் சிங்கம் தன் குட்டிகளைப் பாதுகாப்பாக மறைத்து வைத்து விட்டு உணவு தேடி வெகு தூரம் சென்று விடும் சமயத்தில், ஹைனா, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகளின் கண்ணில் பட்டுவிட்டால் குட்டிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டு விடும்.
யானைகள் கோடை காலத்தில் நீர் தேடி நெடுந் தொலைவு கூட்டமாய்ச் செல்லும் வழியில் இறந்து எலும்புக்கு கூடாய்க் கிடக்கும் தன் கூட்டத்தைச் சேர்ந்த மூத்த யானையைப் பார்த்து விட்டால் அவ் வெலும்புக் கூட்டை ஒவ்வொரு யானையும் வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் . இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மனிதர்களைப் போல தன் மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரே மிருகம் யானைகள்தாம் . யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம் என்பதை  யானைகளின் இச் செயல் நிரூபிப்பதாக இருக்கின்றது.
 
பருந்து மிகவும் புத்திசாலித்தனமானது.  இரை கிடைக்காவிட்டால்  சில சமயங்களில் அது ஆமைகளைக் கூட பிடித்துச் சாப்பிட முயலும். ஆமை  கடினமான தன் மேலோட்டுக்குள் பதுக்கிக் கொள்வதால்  ஆமையைக் கொன்று சாப்பிடுவது கடினமாக இருக்கும்  அதற்காக பருந்து ஒரு தந்திரத்தைக் கையாளும்.. ஆமையை காலால் பிடித்து எடுத்துக் கொண்டு உயரத்திலிருந்து ஒரு பாறையில் விழுமாறு போட்டு விடும். அப்போது அதன் மேலோடு நொறுக்கிப் போக அந்த ஆமையின் மாமிசத்தை உண்ணும் .
கழுகு பருந்து போன்றவை இரண்டு அல்லது மூன்று முட்டைகள் போட்டு குஞ்சு பொரித்தாலும் அவைகளுள் ஒன்று மட்டுமே கூட்டை விட்டு பறந்து செல்கின்றது . குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் போது வலிமையான  ஒன்று அதிகமான பங்கைப் பெற்று பெரிதாக வளரும். நாளடைவில் பலசாலியான அந்தக் குஞ்சே பலவீனமான மற்ற குஞ்சுகளை தன் அலகால் கொத்திக் கொத்திக் கூட்டிலிருந்து வெளியே தள்ளி விட்டுவிடும்  இதை அம்மா பறவை பார்த்தாலும் தடுப்பதில்லை . தன் இனம் வலிமையானவற்றால் நிலைத்து வாழவேண்டும்  என்ற உள்ளுணர்வு அவைகளுக்கு இருப்பதுதான்  இதற்குக் காரணம்.
 .
ஒரு வகையான கடல் பறவை தன் குஞ்சுகளுக்குப் பாதுகாப்பு என்று உயரமான மலைப்பாறைகளில் உள்ள இடுக்குகளில்  முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் .சில வாரங்களுக்குப் பிறகு குஞ்சுகளையும் அழைத்துக் கொண்டு உணவு தேடிக் கொண்டே பயிற்சி அளிப்பதற்காக அவற்றை கீழே உள்ள நிலப்பகுதிக்கு இட்டுச் செல்லும் . அவை ஒவ்வொன்றும் மிக உயரத்திலிருந்து பறக்கும் அனுபவமின்றி பறந்து குதிக்கும் போது சில இறந்து போய் .நரி,.காட்டுநாய் போன்ற வேட்டை விலங்குகளுக்கு இரையாகிப் போவதுமுண்டு . ஆனால் அதற்காகத் தாய்ப்  பறவை அதற்காக கவலைப்படுவதில்லை .எஞ்சிப் பிழைத்தனவற்றோடு  உணவு தேடித் புறப்பட்டுச் செல்கின்றது
ஒரு வகையான வாத்து கூட தன் உணவைத் தானே தேடித் கொள்ளத் தெரியாமல் மீண்டும் மீண்டும் தன்னிடமிருந்தே உணவைப் பெற  முயலும் சோம்பேறித் தனமான குஞ்சுகளைத் தன் ஆலகால் கொத்திக் கொன்று விடுகின்றது
சிம்பான்சி குரங்குகளுக்கு மூளையின் செயல் திறன் அதிகம் . மனிதர்களைப் போல திட்டமிட்டு  செயல்படும். புறச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்க கொண்டு வாழத் தெரியும். புற்றுக்குள் இருக்கும் கரையான்களை பிடித்து உண்ண ஒரு நீண்ட குச்சியை பொந்துக்குள் விட்டு எடுக்கும் அக் குச்சியில் ஒட்டிக் கொண்டு வரும் கரையங்களைப் பிடித்து உண்ணும் . சில சமயம் காய்ந்து போன கொட்டைக்குள் இருக்கும் சுவையான பருப்பை எடுத்துச் சாப்பிட , பெரிய பாறாங்கல்லை எடுத்து  தூக்கிப் போட்டு கொட்டையை உடைத்துப் பருப்பைச் சாப்பிடும்.. புலி, சிங்கம் போன்ற வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிக்க  மலை மீது ஏறி . அங்கிருந்து பாறைகளை அவையிருக்கும் பக்கமாக உருட்டி விடும்
பொதுவாக மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் உள்ளுணர்வு இருக்கின்றது. இதனால்தான் பிறந்தவுடன் தாயிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளாமலேயே தான் செய்யவேண்டிய வேலைகளைச் செய்கின்றது.  மீன் குஞ்சு நீந்துகின்றது. பிறந்த குட்டிகள் தாயின் மடியைத் தேடி பால் குடிக்கின்றன. குட்டிப் பாம்பு ஊர்ந்து செல்கின்றது. குட்டிஆமைகள் கடலை  நோக்கிச் செல்கின்றன. காட்டெருமை, மான், வரிக்குதிரை போன்ற காட்டுவிலங்குகள் குட்டி ஈன்றெடுத்த சில நிமிடங்களில் அவை எழுந்து நிற்கும் . வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிக்க அடுத்த சில நிமிடங்களில் தாயோடு சேர்ந்து ஒடத் தொடங்கும்


No comments:

Post a Comment